தங்க கடத்தல் விவகாரத்தில் திருப்பம் - சென்னிதாலாவுக்கு, ஸ்வப்னா ஐபோன் பரிசளித்ததாக புகார்
பதிவு : அக்டோபர் 03, 2020, 09:22 AM
திருவனந்தபுரம் தங்க கடத்தல் விவகாரத்தில் மேலும் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.
கேரள அரசின் லைஃப் மிஷன் திட்டத்தின் கீழ் கட்டிட கட்டுமான பணிகளில் ஈடுபட்டுள்ள   யூனிடாக் எனும் தனியார் நிறுவனம் சுவப்னா சுரேஷ் உட்பட பலருக்கு கமிஷன் தொகை அளித்ததாக தகவல் வெளியானது. அதை தொடர்ந்து லைப் மிஷன் திட்டத்தில் நிகழ்ந்துள்ள முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை மேற்கொண்டு வருகிறது. அதையொட்டி  வழக்கில் பிரதியாக  யூனிடாக் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் சந்தோஷ் ஈப்பனையும் பிரதியாக சேர்த்துள்ளனர். தன்னை அவ்வழக்கிலிருந்து விடுவிக்க கேட்டு சந்தோஷ் ஈப்பன் கேரள உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தனது நிறுவனத்திடம்  சுவப்னா சுரேஷ் கேட்டுக்கொண்டதை ஒட்டி, 6 ஐபோன்கள் வாங்கி கொடுத்ததாகவும் அதில் ஒன்றை, கேரள எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னித்தலாவுக்கு சுவப்னா  பரிசாக அளித்ததாக சந்தோஷ் ஈப்பன் குறிப்பிட்டுள்ளார். சந்தோஷ் ஈப்பன் வெளியிட்ட தகவல் கேரள மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு  கேரள எதிர்கட்சி தலைவர் ரமேஷ் சென்னித்தலா, மறுப்பு தெரிவித்துள்ளார். தன் மீது தவறான பழி போடுபவர்கள் மீது சட்டப்படியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

சபரிமலை ஐயப்பன் கோவிலில் இன்று நடை திறப்பு; "மலையேறும் போது மட்டும் முகக்கவசம் அணிய வேண்டாம்" - பினராயி விஜயன் கோரிக்கை

சபரிமலையில் மலையேறும் போது மூச்சுவிட சிரமம் ஏற்படும் என்பதால், பக்தர்கள் முகக்கவசம் அணிய வேண்டாம் என மாநில முதல்வர் கோரிக்கை விடுத்துள்ளார்.

663 views

பிற செய்திகள்

முதன்முறையாக குறைந்த கொரோனா இறப்பு விகிதம்

கொரோனா பரவல் மற்றும் உயிரிழப்பு குறைந்து வருவது, புதிய நம்பிக்கையை தருவதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

643 views

எளிமையாக நடந்து முடிந்த மன்னர் "தர்பார்"

உலகப் புகழ்பெற்ற மைசூர் தசரா விழாவின் முக்கிய நிகழ்வான, சாமுண்டீஸ்வரி தேவியின் அம்பாரியை யானை சுமக்கும் நிகழ்ச்சி, ஆரவாரமின்றி அமைதியாக நடந்து முடிந்துள்ளது.

36 views

ராணுவம் சார்பில் புறா பந்தயம் - புறாவுடன் பங்கேற்ற போட்டியாளர்கள்

காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் ராணுவம் சார்பில் புறா பந்தயம் நடைபெற்றது.

6 views

"பீகாரில் வறுமை தலைவிரித்து ஆடுகிறது" - நிதிஷ்குமார் மீது தேஜஸ்வி யாதவ் குற்றச்சாட்டு

வெங்காய விலை 50 முதல் 60 ரூபாயாக விற்கப்பட்ட போது அதிகம் சத்தம் எழுப்பியவர்கள், தற்போது 80 ரூபாயை கடந்து 100 ரூபாய்க்கு விற்கும் போது வாய் மூடி மவுனியாக இருப்பது ஏன் என தேஜ்ஸ்வி யாதவ் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

மெகபூபா அலுவலகத்தில் தேசிய கொடியை ஏற்றிய பாஜகவினர் - மெகபூபா கருத்துக்கு பாஜக பதிலடி

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள மெகபூபா முப்தியின் கட்சி அலுவலகத்தில் பாஜகவினர் தேசிய கொடி ஏற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

864 views

சூடு பிடித்துள்ள பீகார் சட்டமன்ற தேர்தல் களம் - இன்றுடன் நிறைவு பெறுகிறது முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம்

பீகார் சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளதை அடுத்து, முதற்கட்ட தேர்தல் பிரச்சாரம் உச்சகட்டத்தை எட்டியுள்ளது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.