கொரோனா உறுதியானதற்கு முதல் நாள் டிரம்ப் பங்கேற்ற கூட்டம் - டிரம்ப் தூக்கி எறிந்த தொப்பியை பிடித்த ஆதரவாளர்
பதிவு : அக்டோபர் 03, 2020, 09:13 AM
அமெரிக்க அதிபருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையில், அவர் உற்சாகமாக உள்ளதாக வெள்ளை மாளிகை உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் அவரது மனைவி மெலினா டிரம்புக்கு லேசான கொரோனா தொற்று அறிகுறிகள் கண்டு அறியப்பட்டு உள்ளதாக வெள்ளை மாளிகை பணியாளர்கள் தலைவர் மார்க் மேடோஸ் தெரிவித்துள்ளார். அதிபர் டிரம்ப் மிகுந்த திடக்காத்திரமாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ள நிலையிலும், இருவரும் உற்சாகமாக இருப்பதாக மார்க் மேடோஸ் தெரிவித்து உள்ளார். அதிபர் தமது உடல்நலம் மீது மட்டும் அக்கறைக் கொள்ளவில்லை என்றும், ஒட்டுமொத்த அமெரிக்கர்கள் நலனிலும் அக்கறை உடன் இருப்பதாக மார்க் தெரிவித்துள்ளார். 

இதனிடையே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட அமெரிக்க அதிபர் டிரம்ப், மேரிலாண்டில் உள்ள ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனையில் இருந்தபடியே சில நாட்கள் அரசு பணிகளை டிரம்ப் மேற்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிபருக்கு கொரோனா தொற்ற ஏற்பட்டுள்ளதால், இதுவரை மாஸ்க் அணியாமல் இருந்த அவரது உதவியாளர்கள் தற்போது முக கவசம் அணிந்தபடியே வலம் வருகின்றனர். மேலும், கொரோனா பாதிப்பால் டிரம்ப்பின் தேர்தல் பிரச்சாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 

கொரோனா தொற்று உறுதியானதற்கு முதல்நாள் டிரம்ப் மின்னசோட்டா மாகாணத்தில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தார். முக கவசம் அணியாமல் நுழைந்த டிரம்ப், அங்கிருந்த ஆதரவாளர்களை நோக்கி கையசைத்த வண்ணம் வந்தார். அப்போது பேஸ்பால் தொப்பிகளை ஆதரவாளர்களை நோக்கி வீசினார். அவற்றில் ஒன்றை ஒரு ஆதரவாளர் லாவகமாக பிடித்தார். தற்போது டிரம்புக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள நிலையில், அந்த தொப்பியை கேட்ச் பிடித்த ஆதரவாளர் உள்பட அந்த கூட்டத்தில் பங்கேற்ற அனைவரும் கொரோனா பீதியில் உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

அதிபர் டிரம்ப் பதிவு தவறானது - டிவிட்டர் நிறுவனம் அறிவிப்பு

தபால் வாக்குகள் குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் , பதிவிட்டிருந்த கருத்தை, டிவிட்டர் நிறுவனம் தவறான தகவல் அறிவித்து, அந்த தகவல் சர்ச்சைக்குரியது என தெரிவித்துள்ளது.

39 views

ஸ்பெயின் நாட்டில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை - கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி அறிவிப்பு

ஸ்பெயின் நாட்டில் கொரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலை உருவாகியுள்ள நிலையில், கட்டுப்பாடுகளைத் தீவிரப்படுத்தி பிரதமர் பீட்ரோ சாஞ்செஸ் அறிவித்துள்ளார்.

16 views

மேயின் மாகாணத்தில் ஆதரவு திரட்டிய டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப் பதிவுக்கு 10 நாட்களுக்கு குறைவாக உள்ள நிலையில், வாக்கு சேகரிப்பு தீவிரம் அடைந்துள்ளது. மேயின் மாகாணத்தில் உள்ள பழத்தோட்ட பண்ணையில் உள்ள தமது ஆதரவாளர்களிடம் அதிபர் டிரம்ப் நேற்று வாக்கு சேகரித்தார்.

6 views

இத்தாலியின் கொரோனாவால் ஒரே நாளில் 16,000 அதிகமானோர் பாதிப்பு - அமலுக்கு வந்த நள்ளிரவு ஊரடங்கு

இத்தாலியின் ரோம் நகரில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில் ,நள்ளிரவு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

6 views

பிற செய்திகள்

இரட்டை மாட்டு வண்டி பந்தயம் : சீறிப்பாய்ந்த காளைகள் - 64 ஜோடி காளைகள் பங்கேற்பு

இலங்கை மன்னார் மாவட்டம் முருங்கன் பிச்சைகுளம் சவாரித்திடலில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

7 views

அருங்காட்சியகத்தில் டிரம்ப் மெழுகு சிலை அகற்றம் - குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட டிரம்ப் சிலை

ஜெர்மனி தலைநகர் பெர்லினில் உள்ள புகழ்பெற்ற மடாமே டுசுடாஸ் மெழுகு சிலை அருங்காட்சியகத்தில் இருந்த அமெரிக்க அதிபர் டிரம்பின் சிலை அகற்றப்பட்டு உள்ளது.

20 views

நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 22 - 800கும் அதிகமானோர் படுகாயம்

துருக்கி நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 20 - ஐ கடந்துள்ளது.

20 views

"2035 ஆம் ஆண்டு வரை சீன அதிபராக ஜி ஜின்பிங் நீடிப்பார்" - சீன கம்யூனிஸ்டு கட்சி ஒப்புதல்

2035-ம் ஆண்டு வரை ஜீ ஜின்பிங் சீனாவின் அதிபராக பதவி வகிக்க அந்நாட்டின் கம்யூனிஸ்ட் கட்சி ஒப்புதல் அளித்துள்ளது.

16 views

"கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருபவர் ஜோ பைடன்" - தேர்தல் பிரசார கூட்டத்தில் அதிபர் டிரம்ப் சரமாரி குற்றச்சாட்டு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் கருப்பின அமெரிக்கர்களை ஏமாற்றி வருவதாக தற்போதைய அதிபர் டிரம்ப் குற்றஞ்சாட்டியுள்ளார்.

7 views

நவ. 3-ல் அமெரிக்க அதிபர் தேர்தல்: டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் - பிரபல இந்திய ஜோதிடர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் லட்சக்கணக்கான வாக்குகள் கூடுதலாக பெற்று டிரம்ப் மீண்டும் அதிபர் ஆவார் என்று பிரபல இந்திய ஜோதிடர் கணித்துள்ளார்.

821 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.