உலகின் மிக நீளமான சுரங்க பாதை - நாட்டுக்கு இன்று அர்ப்பணிக்கிறார் பிரதமர் மோடி
பதிவு : அக்டோபர் 03, 2020, 09:09 AM
நாட்டின் பாதுகாப்பு தொடர்பான முக்கியமான உள்கட்டமைப்பாகவும், உலகிலேயே கடல் மட்டத்தில் இருந்து மிகவும் உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ள சுரங்கப் பாதையை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.
இமாச்சலப் பிரதேச மாநிலம்  மணாலியில் இருந்து லடாக்கின், லே வரை செல்லும் சாலை வருடத்தில் 6 மாதங்கள் பணியால் மூடப்படும் நிலை காலம் காலமாக உள்ளது.

இந்நிலையில், எல்லைப் பகுதிக்கு ராணுவ வீரர்கள் செல்லவும், பொது மக்களின் வழக்கமான பயன்பாடுகளுக்கு இந்த சாலை​யை பயன்படுத்துவது சிரமமாக இருந்து வந்தது. 

இந்நி​லையில், 1960 ஆம் ஆண்டு, ரோப் கார் அமைக்க அப்போதைய பிரதமர் நேரு திட்டமிட்டார். 

ஆனால் கடந்த 1983 -ல்அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி இங்கு சுரங்கப் பாதை அமைக்க முடிவு செய்தார். அவரது மறைவை தொடர்ந்து திட்டம் கிடப்பில் போடப்பட்டது.

கார்கில் போரை தொடர்ந்து , இந்த  திட்டத்திற்கு 2000 ஆம் ஆண்டு பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

பல்வேறு காரணங்களால் பணிகள் தாமதம் ஆன நிலையில், சுரங்கம் துளையிடும் பணியை 2010ம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதி ஐக்கிய முற்போக்கு கூட்டணி தலைவர் சோனியா காந்தி தொடங்கி வைத்தார். 

பின்னர் ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி, 2019-ல்  இந்த திட்டத்தின் பெயரை முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயரில் மாற்றினார். 

அனைத்து பருவ நிலைகளுக்கு ஏற்றதாக அமைந்துள்ள இந்த சுரங்கப்பாதை, எல்லை பாதுகாப்பிற்காக, லடாக் பகுதிக்கு செல்வதற்கும், எளிதில் அணுக முடியாத லகுல் ஸ்பிட்டி பகுதிக்கு செல்லவும் வசதியாக உருவாக்கப்பட்டுள்ளது.

இமாசல பிரதேச மாநிலத்தின் மணாலியில் இருந்து லடாக்கின், லே நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலையில், கடல் மட்டத்தில் இருந்து 10 ஆயிரம் அடி உயரத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. 

9.2 கிலோ மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்டு உள்ள இந்த சுரங்கம் உலகிலேயே, நெடுஞ்சாலையில் அமைக்கப்பட்டு உள்ள மிக நீளமான சுரங்கம் ஆகும். 

10 ஆண்டுகள் கடும் உழைப்புக்கு பின்னர்  இந்த சுரங்கப் பாதை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 

இதனால், மணாலியில் இருந்து லே செல்லும் பயண தூரம் 46 கி.மீ., குறையும்.

 "அடல் சுரங்கப் பாதை" என பெயரிடப்பட்டு உள்ள இந்த சுரங்கப் பாதையில், ஒவ்வொரு 60 மீட்டர் இடைவெளியில் தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டுள்ளன. 

ஒவ்வொரு 250 மீட்டர் இடைவெளியில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. 

ஒவ்வொரு, 500 மீட்டர் தூரத்திலும், அவசர கால வெளியேறும் வழி வைக்கப்பட்டுள்ளது-

நாளொன்றுக்கு 3 ஆயிரம் கார்கள், ஆயிரத்து 500 சரக்கு வாகனங்கள் செல்லும் வகையில், மணிக்கு 80 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனங்களை இயக்கும் வகையில் இருவழிப்பாதையாக அமைக்கப்பட்டு உள்ளது. 

மொத்தம் 15 ஆயிரம் டன் இரும்பு பயன்படுத்தப்பட்டு
மூவாயிரத்து 500 கோடி மதிப்பில் இந்த சுரங்க பாதை கட்டப்பட்டு உள்ளது. 

60 ஆண்டுகள், 10 பிரதமர்களை கடந்து நிறைவேறியுள்ளது, இந்த வரலாற்று சிறப்பு மிக்க சுரங்கம் பாதை....

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் - இறுதி போட்டிக்கு டாமினிக் தீம் முன்னேற்றம்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் , உலகின் 3ஆம் நிலை வீரரான டாமினிக் தீம் இறுதி போட்டிக்கு முன்னேறி உள்ளார்.

78 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி பிரம்மோற்சவத்தின் 2 ஆம் நாள் - அன்ன வாகனத்தில் அருள் பாலித்த மலையப்ப சுவாமி

திருப்பதி நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளில் அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி அருள் பாலித்தார்.

54 views

துர்கா பூஜைக்கு தயாராகும் மேற்கு வங்கம் - கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரம்

மேற்கு வங்காளத்தில் நவராத்திரி காலத்தில் கொண்டாடப்படும் துர்கா பூஜைக்கு மிகவும் பிரசித்தி பெற்றது.

52 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

8 views

பிற செய்திகள்

நடிகை வனிதா விஜயகுமார் பா.ஜ.க.வில் சேர்கிறார்

நடிகை வனிதா விஜயகுமார் இன்று பாஜகவில் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அண்மையில் நடிகை குஷ்பு பாஜகவில் இணைந்ததையடுத்து பலர் அக்கட்சியில் இணைந்து வருகின்றனர்

167 views

மாவட்ட ஆட்சியர்கள் உள்பட ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழகம் முழுவதும் 18 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

29 views

நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டு - ராகுல்காந்தி விளக்கம்

உத்தரபிரதேச சம்பவத்தை போன்று பஞ்சாப் அல்லது ராஜஸ்தானில் பாலியல் வன்கொடுமை நடக்கவே இல்லை என்று அம்மாநில அரசுகள் மறுக்கவில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

131 views

ஒவ்வொரு சமூகத்திற்கும் வாரியங்கள் - ஆந்திர முதல்வருக்கு ராமதாஸ் பாராட்டு கடிதம்

ஆந்திராவில் பிற்படுத்தப்பட்ட சமுதாயங்களின் முன்னேற்றத்தை உறுதி செய்யும் வகையில், 56 சமூகங்களுக்கு தனித்தனி வாரியங்களை அமைத்துள்ள ஆந்திர மாநில முதலமைச்சர் ஜெகன்ரெட்டிக்கு, பாராட்டு தெரிவித்து பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதி உள்ளார்.

243 views

மனு தர்மம் நூலை தடை செய்யக் கோரிக்கை - திருமாவளவன் தலைமையில் ஆர்ப்பாட்டம்

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகளுக்கு மனு தர்மம் நூலில் உள்ள கருத்தியலே காரணம் என்பதால் அந்த நூலை தடை செய்யக் கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

22 views

ஜெயலலிதா மரணம் விவகாரம்: ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிப்பு

ஜெயலலிதா மரணம் குறித்து விசாரித்து வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் கால அவகாசம் மேலும் 3 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.

10 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.