தனது கதையை புத்தகமாக எழுதியுள்ள ப்ரியங்கா சோப்ரா
பதிவு : அக்டோபர் 03, 2020, 08:44 AM
நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை கதையை UNFINISHED என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார்.
நடிகை ப்ரியங்கா சோப்ரா தனது வாழ்க்கை கதையை UNFINISHED  என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். சிறு வயதில் இந்தியாவில் இருந்ததில் தொடங்கி, இளம்வயதில் படிப்பிற்காக அமெரிக்கா சென்றது, அங்கு நிறவெறி தாக்குதலை எதிர்கொண்டது, மீண்டும் இந்தியாவுக்கு திரும்பி உலக அழகி பட்டம் வென்றது, பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் வெற்றிகரமான நடிகையாக மாறியது வரை பல சுவாரஸ்யங்கள் இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளன. தற்போது இந்த புத்தகத்தை பெறுவதற்கான முன்பதிவு தொடங்கியுள்ள தகவலை புத்தகத்தின்அட்டை படத்தை வெளியிட்டு அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் இந்த புத்தகத்தின் விலை 28 டாலர். விரைவில் இந்தியாவிலும் வெளியாக உள்ளது.

பாட்டியின் 101வது பிறந்தநாளுக்கு பாடல் பாடிய ராக்

ஹாலிவுட் நடிகர் ராக் , 101வது பிறந்தநாள் கொண்டாடும் தனது பாட்டிக்கு "ஹேப்பி பர்த்டே" பாடிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தன்னை வீடியோ காலில் பார்த்தவுடன் தனது பாட்டி ஹேர்ஸ்டைலை சரி செய்து கொள்ளும் அழகை மிகவும் ரசிப்பதாக ராக் தெரிவித்துள்ளார். இந்த வீடியோவின்போது தன்னை சுற்றி யாரும் இல்லை என்பதை காட்டிய பிறகு , மாஸ்கை நீக்கிவிட்டு ராக் பாடுவதை ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

சொந்தமாக ஸ்டூடியோ தொடங்கிய அல்லு அர்ஜுன்

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு நம்மூரிலும் ரசிகர்கள் உள்ளனர். கடந்த 2004ம் ஆண்டு மறைந்த, இவரின் தாத்தா அல்லு ராமலிங்கையா நகைச்சுவை நடிகராக பல படங்களில் நடித்தவர். சினிமா மீது தனது குடும்பத்திற்கு உள்ள காதலையும் தாத்தாவை கௌரவிக்கும் வகையிலும், தாத்தாவின் பிறந்தநாளன்று தனது ஸ்டூடியோவின் கட்டுமான பணிகளை தொடங்கி உள்ளதாக புகைப்படம் வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார் அல்லு அர்ஜுன்.

மாதவன் - அனுஷ்கா - அஞ்சலி நடிப்பில் "சைலென்ஸ்" - உலகமெங்கும் OTT-யில் வெளியாகி உள்ளது

மாதவன் - அனுஷ்கா இருவரும் இணைந்து "ரெண்டு" என்ற படத்தில் நடித்திருந்தனர். தற்போது இந்த ஜோடி மீண்டும் "சைலென்ஸ்" என்ற திகில் படத்தில் நடித்துள்ளது. ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில் நடிகைகள் அஞ்சலி மற்றும் ஷாலினி பாண்டேவும் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் OTT-யில் வெளியாகியுள்ளது. 

விக்ரம் ரசிகர்களுக்கு விரைவில் இசை விருந்து - கௌதம் மேனன் வெளியிட்ட "துருவ நட்சத்திரம்" தகவல்

விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் உருவாகும் "துருவ நட்சத்திரம்" மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த கௌதம் - ஹாரிஸ் ஜெயராஜ் கூட்டணியில் "ஒரு மனம்" என்ற பாடல் விரைவில் வெளியாக உள்ளதாக கௌதம் மேனன் அறிவித்துள்ளார். இதற்காக ஒரு போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. ரித்து வர்மா கதாநாயகியாக நடித்துள்ள இந்த படத்தில் பார்திபன் , சிம்ரன், ராதிகா, ஐஷ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

102 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

10 views

பிற செய்திகள்

ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ள தனுஷ் - ரசிகர்கள் ஆசையை நிறைவேற்றிய ரஹ்மான்

நடிகராக மட்டுமல்லாமல் பாடகராகவும் ஜொலித்து வரும் தனுஷ் முதன்முறையாக ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.

28 views

கருப்பு உடையில் கலக்கும் சிம்பு - கொண்டாட்டத்தில் சிம்பு ரசிகர்கள்

கொரோனா காலத்தில் கடும் முயற்சியால் உடல் எடையை குறைத்துள்ள சிம்புவின் புதிய புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

116 views

பாடகியான ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் - இணையதளத்தில் வேகமாக பரவும் பரிஸ்டான் பாடல்

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் மகள் கஜிதா ரஹ்மான் பாடிய பாடல் இணையதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

2809 views

5 மொழிகளில் சிம்புவின் 'ஈஸ்வரன்' - 20 கிலோ எடையை குறைத்த சிம்பு

சுசீந்திரன் இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்து வரும் ஈஸ்வரன் திரைப்படம் 5 மொழிகளில் வெளியாக உள்ளது.

736 views

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிக்கும் தனுஷ்? - விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

285 views

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" - ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

"இந்தியாவின் மிக அழகிய பெண் தீபிகா படுகோனே" எனவும் "மிகவும் மதிப்புக்குரியவர் அக்‌ஷய் குமார்"எனவும் "மதிப்பிற்குரிய பிரபலம் அமிதாப் பச்சன்" எனவும் ஜப்பான் நிறுவனம் நடத்திய ஆய்வில் தகவல்

1598 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.