மருத்துவ நிபுணர்களுடன் 29ஆம் தேதி முதல்வர் ஆலோசனை
பதிவு : செப்டம்பர் 24, 2020, 06:02 PM
மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார்.
தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து தீவிர தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வந்த போதும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத்தொடர்ந்து நோய்க் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது. விதிமுறைகள் மீறப்படுவதை குற்றமாக கருத வகை செய்யும் அவசர சட்டத்தை தமிழக ஆளுநர் பிறப்பித்திருந்தார். மேலும் தமிழகத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான பொது போக்குவரத்துக்கு கடந்த 7-ஆம் தேதி முதல் தமிழக அரசு அனுமதி அளித்தது.  இந்நிலையில், மருத்துவ நிபுணர்களுடன் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி ஆலோசனை நடத்துகிறார். அப்போது, பொதுமுடக்க தளர்வுகளை மேலும் அதிகரிப்பது குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.