பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்
பதிவு : செப்டம்பர் 19, 2020, 03:00 PM
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.
மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க  புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன்  சிறப்பாக துவங்கியது. அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி புறப்பாடு திருக்கோயிலின் உட்பிரகாரத்தில் மட்டுமே நடைபெறும் என்றும், அதில் பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதியில்லை என்றும் ஆலய நிர்வாகம் தெரிவித்துள்ளது,. அதேபோல் அர்ச்சனை , திருமஞ்சனம் , அமர்வு தரிசனம் போன்ற சிறப்பு நடைமுறைகள் அரசின் மறு உத்தரவு வரும் வரை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது,. இருந்த போதிலும் மற்ற நேரங்களில் பக்தர்கள் வழக்கம் போல் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது

புரட்டாசி மாத சனிக்கிழமை தரிசனம்:முத்தங்கி அலங்காரத்தில் பெருமாள் 
- ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் 

புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஸ்ரீ நித்யகல்யாண பெருமாள் கோயிலில், புரட்டாசி மாத முதல் சனிக்கிழமை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.  கோயிலில் மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. கோவிலில் உற்சவர் முத்தங்கி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். கோவிலில் விரிவான கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து - 3 பெண்கள் உள்பட 5 பேர் பலி

மதுரை மாவட்டத்தில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

88 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

63 views

நவராத்திரி 8-ம் நாள் விழா - கல்கி அவதாரத்தில் தோன்றிய மலையப்ப சுவாமி

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி 8-ம் நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.

9 views

பிற செய்திகள்

"7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும்" - பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

7.5% இட ஒதுக்கீடு அரசாணைக்கு சட்டப்பாதுகாப்பு வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

12 views

"5ஜி அலைக்கற்றை ஏலம் நடத்தினால் பார்தி ஏர்டெல் பங்கேற்காது" - பார்தி ஏர்டெல் நிறுவன தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் தகவல்

அடுத்த ஆண்டு 5ஜி அலைக்கற்றைகளுக்கான ஏலம் நடத்தப்பட்டால், பார்தி ஏர்டெல் அதில் பங்கேற்காது என்று அந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி கோபால் விட்டல் கூறியுள்ளார்.

12 views

தொடங்கிய பருவமழை - கனமழையால் வெள்ளத்தில் மூழ்கிய சென்னை

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை நேற்று தொடங்கிய நிலையில், சென்னையில் காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு, தொடர்ந்து அவ்வப்போது, மழை பெய்து வருகிறது.

67 views

திருச்சி : தற்காலிக சந்தை தொடர ரயில்வே நிர்வாகம் 'பச்சைக்கொடி'

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக திருச்சி காந்தி சந்தை காலவரையின்றி மூடப்பட்டுள்ளது.

11 views

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்துக்கு எதிர்ப்பு

மதுரை எய்ம்ஸ் உறுப்பினர் நியமனத்தை எதிர்த்து இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் உருவ பொம்மை எரிப்பு போராட்டம் நடத்தினர்.

10 views

கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் ரெய்டு - கணக்கில் காட்டாமல் ரூ.150 கோடி மதிப்பிலான சொத்துகள்

ஈரோட்டில் கல்வி நிறுவனத்துக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் காட்டாத 150 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டதாக வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

9 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.