பாகிஸ்தான் வெளியிட்டு உள்ள புதிய அரசியல் வரைபடம் - இந்தியா நிராகரிப்பு என மாநிலங்களவையில் அரசு தகவல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 04:06 PM
ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனாகத் போன்ற பகுதிகளை பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதிகளாக உரிமை கோரும் புதிய அரசியல் வரைபடத்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டார்.
ஜம்மு - காஷ்மீரின் சில பகுதிகள் மற்றும் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜுனாகத் போன்ற பகுதிகளை பாகிஸ்தான் நாட்டு எல்லைப் பகுதிகளாக உரிமை கோரும் புதிய அரசியல் வரைபடத்தை ஆகஸ்ட் 4 ஆம் தேதி அந்நாட்டு பிரதமர் இம்ரான்கான் வெளியிட்டார். இதுதொடர்பாக பா.ஜ.க. எம்.பி. ஜோதிர் ஆதித்ய சிந்தியா எழுப்பிய கேள்விக்கு, பதிலளித்த மத்திய இணை அமைச்சர் முரளிதரன் பாகிஸ்தானின் கூற்று அபத்தமானது என்றும், அதனை  ஏற்றுக்கொள்ள முடியாதது எனவும் தெரிவித்து உள்ளார். பாகிஸ்தான் அரசின் இந்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளததகவும், இதற்கு எந்த விதமான சட்ட ரீதியான செல்லுபடி தன்மையோ அல்லது சர்வதேச நம்பகத்தன்மையோ இல்லை என்றும் அவர் மாநிலங்களவையில் விளக்கம் அளித்துள்ளார். ஜம்மு, காஷ்மீர் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில், பாகிஸ்தானின் அவதூறான செயல்கள் மற்றும் பிரச்சாரங்கள் போன்றவற்றுக்கு சர்வதேச அரங்கில் உரிய முறையில் இந்தியா தொடர்ந்து பதிலடி கொடுத்து வருவதாகவும் அமைச்சர் முரளிதரன் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.