இருநாடுகள் இடையிலான ஒப்பந்தத்தை சீனா தொடர்ந்து மீறுகிறது - பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 03:18 PM
எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே மிகக் குறைந்த அளவே படைகளை நிறுத்தும் விதியை சீனா தொடர்ந்து மீறி வருவதாக பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
மாநிலங்களவையில் இதுதொடர்பாக பேசிய அமைச்சர் ராஜ்நாத் சிங், மே மாத மத்தியில்  பலமுறை எல்லைக் கோட்டைத் தாண்ட சீனா முயற்சித்ததாக ராஜ்நாத் சிங் குற்றம்சாட்டி உள்ளார். அதேநேரத்தில், சீனாவின் இந்த முயற்சி தொடக்கத்திலேயே கண்டறியப்பட்டு உரிய முறையில் முறியடிக்கப்பட்டது என ராஜ்நாத் சிங் தெரிவித்தார். ஏற்கனவே இருக்கும் நிலையை தன்னிச்சையாக சீனா மீறுவதை ஏற்றுக் கொள்ள முடியாது என  ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சு வார்த்தைகள் மூலமாக, நமது உறுதியான நிலைப்பாட்டை தெரிவித்து உள்ளதாகவும்  ராஜ்நாத் சிங் தெரிவித்தார். தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையை அமைதியான பேச்சு வார்த்தை மற்றும் கலந்துரையாடல் மூலம் தீர்க்க தொடர்ந்து உறுதி பூண்டு உள்ளதாகவும், கடந்த காலங்களிலும் இதுபோன்று எல்லை விவகாரத்தில் சீனாவுடன் மோதல் ஏற்பட்டு பின்னர் அவை அமைதியான முறையில் தீர்க்கப்பட்டதையும் ராஜ்நாத் சிங் சுட்டிக்காட்டினார். நமது  வீரர்கள் மீது அசைக்க முடியாத நம்பிக்கை, விசுவாசத்தை வெளிப்படுத்தி, தாய் மண்ணை பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ள வீரர்களுக்கு, அனைவரும் ஆதரவை வழங்க வேண்டும் என பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் கேட்டுக் கொண்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.