காலில் வலி என்று மருத்துவமனைக்கு சென்ற பெண் - கொரோனா இருப்பதாக வந்த குறுந்தகவல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 03:13 PM
காலில் வலி என்று மருத்துவமனைக்கு சென்ற பெண்ணுக்கு, கொரோனா பாசிட்டிவ் என குறுஞ்செய்தி வந்த‌தால், மயங்கியே விழுந்துவிட்டார் அந்த பெண்... நடந்தது என்ன என விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...
கன்னியாகுமரி மாவட்டம் ஈச்சன்விளை பகுதியை சேர்ந்த 54 வயது பெண் ஒருவர் கால்வலிக்காக அகஸ்தீஸ்வரம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தார். அப்போது அவருக்கு சுகர் டெஸ்ட் என்ற பெயரில் சில பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதையடுத்து, அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்த நிலையில், தான் மாலையில் அந்த அதிர்ச்சியளிக்கும் தகவல், எஸ்.எம்.எஸ். வாயிலாக அவருக்கு கிடைத்துள்ளது.

ஆம்.. அவருக்கு கொரோனா இருப்பதாக குறுந்தகவல் வந்துள்ளது. இதைக்கேட்ட அந்த நொடி, அந்த பெண் மயங்கியே விழுந்துள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண், தனியார் மருத்துவமனையில் கொரோனா டெஸ்ட் எடுத்துள்ளார். அங்கு கொரோனா இல்லை என முடிவு வந்துள்ளது. 

இது ஒருபுறம் இருக்க, அரசு மருத்துவமனையில் இருந்து தொடர்பு கொண்ட ஊழியர்கள், உடனே மருத்துவமனையில் வந்து சிகிச்சை பெறுமாறு வற்புறுத்தியுள்ளனர். பெண் தரப்பில் இருந்து எவ்வளவோ விளக்கி கூறியும் கேட்காத ஊழியர்கள் காவல்துறையை விட்டு மருத்துவமனையில் அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளனர். 

கொரோனா பரிசோதனைக்கு சளி மாதிரி கூட கொடுக்காத தன் தாய்க்கு எப்படி ரிசல்ட் கொடுத்தார்கள் என ஜெசி கேட்கும் கேள்விகளுக்கு, சம்மந்தபட்ட அரசு மருத்துவமனை தான் பதில் கூற வேண்டும்.... 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.