பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் 2 அரசுகளா? - முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி
பதிவு : செப்டம்பர் 17, 2020, 02:14 PM
பிரதமர் மோடி தலைமையில் நாட்டில் 2 அரசுகள் செயல்படுகிறதோ என, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார்.
கொரோனா ஊரடங்கால் சுருங்கிப் போன இந்திய பொருளாதார வளர்ச்சி, உடனடியாக மீண்டெழ வாய்ப்பு இல்லை என்பதை  ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெளிவுப்படுத்தி உள்ளதாக முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். பொருளாதாரம் வி-வடிவில் வளர்ச்சி அடையும் என்றும் , அதே நேரத்தில் இந்த வளர்ச்சி நீண்ட கால அளவில்  படிப்படியாகவும் இருக்கும் என சக்திகாந்த தாஸ் கூறியதை ப.சிதம்பரம் மேற்கோள்காட்டி, தமது பதிவில் குறிப்பிட்டுள்ளார். இந்திய ரிசர்வ் வங்கி ஆளுநரைப் போலவே, ஒவ்வொரு நேர்காணலிலும், பொது நிகழ்வுகளிலும் வி வடிவ பொருளாதார வளர்ச்சி கோட்பாட்டை  தலைமை பொருளாதார ஆலோசகர் சந்தை படுத்தி வருவதாகவும் ப.சிதம்பரம் சாடியுள்ளார். கடந்த 6 மாதங்களில் இந்திய எல்லையில் சீன ஊடுருவல் இல்லை என உள்துறை இணையமைச்சர் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கும் அதே நேரத்தில், எல்லையில் அமைதி மற்றும் நல்லிணக்கம் திரும்ப, ஊடுருவல் பகுதிகளில் இருந்து சீனா பின்வாங்க வேண்டும் என பாதுகாப்பு மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் எச்சரித்து வருவதாக ப.சிதம்பரம் சுட்டிக்காட்டி உள்ளார். அமைச்சர்களின் இந்த நடவடிக்கை, நாட்டின் ஒரே பிரதமரான மோடி தலைமையில் இரண்டு அரசுகள் இயங்குகிறதோ என்ற ஆச்சரியமான ஒரு கேள்வியை எழுப்புவதாக உள்ளது என மோடி அரசின் நிலைப்பாட்டை ப.சிதம்பரம் சாடியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.