கல்வி கட்டணம் செலுத்த கால அவகாசம் கோரிய வழக்கு - விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 02:02 PM
கல்வி கட்டணத்தை செலுத்த போதுமான கால அவகாசம் வழங்க, பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது.
கல்வி கட்டணத்தை செலுத்த போதுமான கால அவகாசம் வழங்க, பல்கலைக் கழக மானியக்குழு மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியாவுக்கு உத்தரவிடக் கோரிய மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மனுதாரர்கள் சம்மந்தப்பட்ட உயர்நீதிமன்றத்தை அணுக நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர். ஆக்ராவை சேர்ந்த ராமே கிருஷண் ராணா தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி அசோக் பூஷண் அமர்வு, இதுபோன்ற மனுக்களை ஏற்கெனவே தள்ளுபடி செய்து உள்ளோம் என சுட்டிக்காட்டினர்.  ஒவ்வொரு மாநிலமும், பல்கலைக் கழகமும் பல்வேறு விதிகளை கொண்டு இயங்கி வருகிறது. எனவே, இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொள்ள முடியாது என நீதிபதிகள் தெரிவித்து உள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.