தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் நியமன விவகாரம் - ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் தகவல்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 01:53 PM
தெற்கு ரயில்வேயில் டெக்னீசியன் நியமனங்கள் பெற்ற 2,556 பேரில் ஆயிரத்து 686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார்.
தெற்கு ரயில்வேயில்  டெக்னீசியன் நியமனங்கள் பெற்ற 2,556 பேரில் ஆயிரத்து 686 பேர் இந்தி மொழியில் தேர்வு எழுதியவர்கள் என மதுரை மக்களவை தொகுதி உறுப்பினர்  சு.வெங்கடேசன் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் பதில் அளித்துள்ளார். மேலும், தமிழில்  139 பேர் , மலையாளத்தில் 221 பேர் மற்றும் ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு  எழுதியவர்கள் 504 பேர் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.   இளநிலை பொறியாளர் நியமனத்திற்கான தேர்வு எழுதிய ஆயிரத்து 180 பேரில், இந்தியில் 160 பேரும், மலையாளத்தில் 315 பேரும், தமிழில் 268 பேரும் தேர்வு எழுதியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு 437 பேர் தேர்வெழுதியதாகவும் அமைச்சர் பியூஸ்கோயல் தெரிவித்துள்ளார். அசிஸ்டெண்ட் லோகோ பைலட் நியமனத்திற்கான தேர்​வு எழுதிய 908 பேரில், இந்தியில்  90 பேரும், மலையாளத்தில்176 பேரும், தமிழில் 333 பேரும் தேர்வெழுதியாக தெரிவித்துள்ளார். ஆங்கிலம் உள்ளிட்ட மற்ற மொழிகளில் தேர்வு எழுதியவர்கள் 309 பேர் என்றும் தெரிவித்துள்ள பியூஸ் கோயல்,  எந்தெந்த மாநில முகவரிகளைக் கொண்டவர்கள் என்பதற்கு பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.