குடியரசுத் தலைவர் பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து
பதிவு : செப்டம்பர் 17, 2020, 12:04 PM
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பிரதமர் நரேந்திர மோடிக்கு  பிறந்த நாள் வாழ்த்து  தெரிவித்துள்ளார்.  இந்தியாவின் மதிப்புமிக்க ஜனநாயக பாரம்பரியத்தில் விசுவாமிக்க லட்சியத்தை பிரதமர் மோடி கொண்டுள்ளதாக குடியரசு தலைவர் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  பிரதமர் மோடியை  எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் கடவுள்
வைத்திருக்க வேண்டும் என்றும் குடியரசு தலைவர் தெரிவித்துள்ளார். 

பிரதமர் மோடிக்கு நிர்மலா சீதாராமன் பிறந்த நாள் வாழ்த்து 

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிரதமர்  மோடிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். நாட்டிற்காக பிரதமர் தம்மை முழுமையாக அர்பணித்துள்ளதாகவும், பிரதமரின் தன்னலமற்ற, சோர்வற்ற சேவைகளால் , உலக அரங்கில் இந்தியா வேகமாக முன்னேறி வருவதாகவும்  நிர்மலா சீதாராமன் தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். பிரதமரின் உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு  தாம் பிரார்த்திற்பதாக  நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

ராகுல்காந்தி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து 

பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். பிரதமர் மோடியின் மகிழ்ச்சியான பிறந்த நாளில் தமது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதாக ராகுல்காந்தி தமது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். 

முதலமைச்சர் பழனிசாமி, துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் பிரதமருக்கு வாழ்த்து

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மலர் கொத்துடன் பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் வாழ்த்து கடிதம் அனுப்பியுள்ளார். பிரதமர் மோடி ஆரோக்கியம் மற்றும் வலிமையுடன் பல வருடங்கள்  நாட்டிற்கு  சேவையாற்ற  வேண்டும் என்று அதில் முதலமைச்சர் குறிப்பிட்டுள்ளார். இதேபோல் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வமும்  பிரதமர் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தியாவை முன்மாதிரி நாடாக்கும் குறிக்கோளுடன் செயல்பட்டு வரும் பிரதமர் மோடி நல்ல உடல் நலத்துடன் இருக்க வேண்டும் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.