பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா - 71 கிலோ கேக் வெட்டி கொண்டாட்டம்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 11:19 AM
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா, குஜராத் மாநிலம் சூரத்தில் 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது.
பிரதமர் மோடியின் 70-வது பிறந்தநாள் விழா, குஜராத் மாநிலம் சூரத்தில் 71 கிலோ கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. மிக நீளமான அந்த கேக்கில், கொரோனா தொற்றில் இருந்து மக்களை காக்கும் முன்கள பணியாளர்களை கவுரவித்தும், நன்றி தெரிவிக்கும் வகையிலான படங்கள் இடம்பெற்றிருந்தன. அந்த கேக் 711 முன்கள பணியாளர்களுக்கு வழங்கப்பட்டது. 

பிரதமரை வாழ்த்தி 7 அடி உயர மணல் சிற்பம் 

பிரதமர் மோடியின் பிறந்தநாள், நாடு முழுவதும் பா.ஜ.க தொண்டர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் ஒடிசா மாநிலம் பூரி கடற்கரையில், பிரதமரை வாழ்த்தி மணல் சிற்பம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பிரபல கலைஞர் சுதர்சன் பட்நாயக் அந்த 7 அடி உயர மணல் சிற்பத்தை உருவாக்கியுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.