இங்கிலாந்து-ஆஸ்திரேலியா ஒருநாள் கிரிக்கெட் தொடரை வென்றது ஆஸ்திரேலியா
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:58 AM
இங்கிலாந்துக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் 3-வது மற்றும் இறுதிப்போட்டியில், 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா, தொடரையும் கைப்பற்றியது.
மான்செஸ்டர் நகரில் நடந்த இந்த ஆட்டத்தில், டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இங்கிலாந்துக்கு ஆரம்பமே அதிர்ச்சிகரமாய் அமைந்தது. ஸ்டார்க் வீசிய முதல் ஓவரில் இங்கிலாந்து வீரர்கள் ராயும், ரூட்டும் ரன் ஏதும் எடுக்காமல் அடுத்தடுத்து வெளியேறினர். இருப்பினும் பின்னர் சுதாரித்து ஆடிய இங்கிலாந்து, பேர்ஸ்டோவின் அதிரடி சதத்தால் 50 ஓவர்கள் முடிவில் 302 ரன்கள் குவித்தது. பின்னர் ஆடிய ஆஸ்திரேலியாவுக்கு சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தாலும், மேக்ஸ்வெல்-கேரி ஜோடி அதிரடி காட்டி அணியை மீட்டது. இருவரும் சதம் அடித்து ஆட்டமிழந்த நிலையில், கடைசி ஓவரில் ஆஸ்திரேலியாவின் வெற்றிக்கு 10 ரன்கள் தேவைப்பட்டது. அப்போது, ஸ்டார்க் பவுண்டரி அடித்து அணியை வெற்றி பெற செய்தார். இதன் மூலம் 49.4 ஓவரில் வெற்றி இலக்கை எட்டிய ஆஸ்திரேலியா, 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-க்கு 1 என்ற கணக்கில் கைப்பற்றி அசத்தியது. ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல் ஆட்ட நாயகனாகவும், தொடர் நாயகனாகவும் தேர்வு செய்யப்பட்டார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.