2019 - 2020 தங்க டெபாசிட் 68% ஆக அதிகரிப்பு - எஸ்.பி.ஐ வங்கியில், 4,370 கிலோ தங்கம் டெபாசிட்
பதிவு : செப்டம்பர் 17, 2020, 09:24 AM
வங்கிகளில் 2019-20 ஆம் ஆண்டு, சேகரிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 68 சதவீதம் அதிகரித்து 4,643 கிலோவாக உயர்ந்துள்ளது.
வங்கிகளில் 2019-20 ஆம் ஆண்டு, சேகரிக்கப்பட்ட தங்கத்தின் அளவு 68 சதவீதம் அதிகரித்து 4,643 கிலோவாக உயர்ந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம்,  பொது மக்கள், கோயில் நிர்வாகங்கள் மற்றும் இதர பிரிவினர், தங்கள் வசம் உள்ள தங்கத்தை வங்கிகளில் டெபாசிட் செய்து, குறைந்த பட்ச வட்டி பெற முடியும். 
இதில் எஸ்.பி.ஐ மட்டும் 4,370 கிலோ தங்கத்தை டெப்பாசிட்டாக பெற்றுள்ளது. எஸ்.பி.ஐ வங்கி ஓராண்டு டெபாசிட்களுக்கு 0.5 சதவீத வட்டியும், மூன்றாண்டுகளுக்கு 0.6 சதவீதமும் அளிக்கிறது. 12 முதல் 15 வருட டெபாசிட்களுக்கு 2.5 சதவீதம் அளிக்கிறது. 2015 - ல் தொடங்கப்பட்ட இந்த திட்டத்தில், தங்க டெப்பாசிட் செய்ய உச்ச வரம்பு எதுவும் விதிக்கப்படவில்லை.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.