ஆர்ய வைத்திய சாலை தலைவர் கிருஷ்ணகுமார் கொரோவால் உயிரிழப்பு
பதிவு : செப்டம்பர் 17, 2020, 08:44 AM
பத்மஸ்ரீ விருது வென்ற கோவை ஆர்ய வைத்திய சாலை தலைவர் கிருஷ்ணகுமார் கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், கடந்த10 நாட்களுக்கு மேலாக கிருஷ்ணகுமார் கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், அவரது உடல் நிலை மோசமடைந்ததை தொடர்ந்து மூச்சுத் திணறலால் அவர் உயிரிழந்தார். ஆயுர்வேத சிகிச்சையில் சிறந்து விளங்கியதற்காக, மத்திய அரசின் உயரிய விருதான பத்மஸ்ரீ விருதை மத்திய அரசு அவருக்கு வழங்கி கவுரவித்தது. இது தவிர, பல்வேறு பல்கலைக் கழகங்கள் சார்பில் டாக்டர் பட்டமும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த 2015ல் இருந்து கோவை அவினாசிலிங்கம் பல்கலையின் வேந்தராகவும் கிருஷ்ணகுமார் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

கிருஷ்ணகுமார்  உயிரிழப்புக்கு பிரதமர் இரங்கல்

ஆர்ய வைத்திய சாலை தலைவர் கிருஷ்ணகுமார்  உயிரிழப்புக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், கிருஷ்ணகுமார், ஆயுர்வேத மருத்துவத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்றவர் என்று புகழாரம் சூட்டியுள்ளார். கிருஷ்ணகுமார் மிகவும் அறிவார்ந்த மனிதர் என்றும் மோடி குறிப்பிட்டுள்ளார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.