தமிழகத்தில் புதிதாக 5,652 பேருக்கு கொரோனா
பதிவு : செப்டம்பர் 16, 2020, 10:13 PM
தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில் இன்று 82 ஆயிரத்து 644 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் 5 ஆயிரத்து 652 பேருக்கு தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 5 லட்சத்து 19 ஆயிரத்து 860 ஆக உயர்ந்து இருக்கிறது. இன்று 5 ஆயிரத்து 768 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட நிலையில் , 57 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. சுமார் 46 ஆயிரம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சென்னையில் மேலும் 983 பேருக்கு கொரோனா 

சென்னையில் இன்று 983 பேருக்கு தொற்று உறுதியானது. சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் 4 ஆயிரத்து 669 பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. சென்னையில் இன்று ஆயிரத்து 29 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 14 உயிரிழப்புகள் நிகழ்ந்து இருக்கிறது. மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1 லட்சத்து 51 ஆயிரத்து 560 ஆக உயர்ந்து உள்ளது. 9 ஆயிரத்து 833 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.