திமுகவில் இணைந்த அமைச்சரின் அண்ணன் மகன்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 10:08 PM
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், திமுகவில் இணைந்துள்ளார்.
அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் அண்ணன் கே.ஏ.காளியப்பனின் மகன் செல்வம், திமுகவில் இணைந்துள்ளார். சென்னை, அண்ணா அறிவாலயத்தில், திமுக தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் செல்வம் திமுகவில் இணைந்தார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த செல்வம், அதிமுக கட்சிக்குள்ளும், ஆட்சியிலும் குறைபாடு இருப்பதாக கூறினார். அடுத்து திமுக ஆட்சி தான் அமையும் என்றும், குடும்பத்தில் எந்த வித கருத்து மோதல்களும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.