பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்.30-ல் தீர்ப்பு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 04:50 PM
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பாபர் மசூதி இடிப்பு வழக்கில் செப்டம்பர் 30-ஆம் தேதி தீர்ப்பு  வழங்கப்படும் என, லக்னோ சிறப்பு சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. பாபர் மசூதி இடிப்பு வழக்கு, லக்னோ சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், தினமும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது. இந்த வழக்கில் அத்வானி, முரளி மனோகா் ஜோஷி உள்ளிட்ட 32 போ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. வழக்கு தொடர்பான விவாதங்கள் செவ்வாய்கிழமை நிறைவடைந்ததையடுத்து, வழக்கில் செப்டம்பர் 30ம் தேதி  தீர்ப்பு  என லக்னோ சிறப்பு நீதிமன்றம் அறிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.