இந்திய பொருளாதாரம் மீண்டு வருகிறது - ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ்
பதிவு : செப்டம்பர் 16, 2020, 04:05 PM
இந்திய பொருளாதாரம், கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார்.
இந்திய பொருளாதாரம், கொரோனா ஊரடங்கின் தாக்கத்தில் இருந்து மீண்டு வருவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் தெரிவித்துள்ளார். இந்திய தொழில் கூட்டமைப்பின் கலந்தாய்வு கூட்டத்தில் பேசிய அவர், முதலீடு செய்வது குறித்து அச்சத்தில் இருந்து விடுப்பட்டுள்ள பன்னாட்டு நிதி நிறுவனங்கள்,  இந்திய பங்கு சந்தைகளில் அதிக முதலீடு செய்து வருவதாக தெரிவித்தார். இதனால், இந்தியப் பங்கு சந்தை வெகுவாக உயர்வதாக குறிபிட்ட அவர், தங்கம் விலை மீண்டும் குறைந்து வருகிறது என்றார். அனைத்து சிறு, குறு நிறுவனங்களுக்கு தேவையான கடன் உதவிகள் தாரளமாக கிடைப்பதாக அவர் கூறினார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.