காட்டுத் தீயால் 3 மாகாணங்கள் பாதிப்பு - கலிஃபோர்னியாவில் கமலா ஹாரிஸ் ஆய்வு
பதிவு : செப்டம்பர் 16, 2020, 09:58 AM
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.
காட்டுத் தீயால் பாதிக்கப்பட்டுள்ள அமெரிக்காவின் கலிஃபோர்னியா  மாகாணத்தில், துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் கமலா ஹாரிஸ் நேற்று ஆய்வு மேற்கொண்டார். ஆகஸ்ட் மத்தியில் தொடங்கிய இந்த காட்டுத் தீயில் சிக்கி கலிஃபோர்னியாவில் 25 பேரும், வாஷிங்டன்னில் ஒருவரும் உயிரிழந்துள்ளனர். இதுவரை 3 மாகாணங்களில் ஆறாயிரத்து 200 வீடுகள் மற்றும் நிறுவனங்கள் தீயில் முற்றிலும் சேதம் அடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பருவநிலை மாற்றத்தால் ஏற்படும் காட்டுத் தீயின் வீரியம் குறித்து அறியாத அதிபர் பதவியில் உள்ளதாக டிரம்பை, ஜோ பிடன் கடுமையாக சாடியிருந்த நிலையில், அதிபர் டிரம்பை விமர்சிப்பது மக்களை பிரிக்கும் செயலோ, தத்துவமோ அல்ல என்றும், நாம் அனைவரும் இணைந்து இதற்கு தீர்வுக்காண முன்வர வேண்டும் என கமலா ஹாரிஸ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். 

பிற செய்திகள்

டிக்-டாக் செயலி ஒப்பந்தத்துக்கு அதிபர் டிரம்ப் திடீர் அனுமதி

டிக்-டாக் செயலியுடன் ஆரக்கிள் மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் செய்து கொண்ட ஒப்பந்தத்துக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆதரவு அளித்து உள்ளார்.

305 views

மண்ணில் புதைந்த 5 மாடிக்கட்டடம் - பச்சிளம் குழந்தை உயிரிழப்பு

இலங்கை கண்டி அருகே பூவெலிகட பகுதியில் ஐந்து மாடிக் கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் பச்சிளம் குழந்தை உயிரிழந்தது.

22 views

தென்னை மரம் ஏறிய இலங்கை அமைச்சர் - தேங்காய் பற்றாக்குறை குறித்து விளக்கம்

தேங்காய் பற்றாக்குறை குறித்து மக்களிடம் பேச இலங்கை அமைச்சர் அருந்திகா பெர்னாண்டோ தென்னை மரம் ஏறியது சுவாரஸ்யத்தை ஏற்படுத்தியுள்ளது.

31 views

கேக் சாப்பிட்டு 54வது பிறந்தநாள் கொண்டாடிய ஆமை

ஆமை ஒன்று தனது 54வது பிறந்தநாளை கேக் சாப்பிட்டு கொண்டாடிய வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

11 views

டிக்-டாக் செயலிக்கு தடை விதிப்பு - டிரம்ப் நிர்வாகத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு

அமெரிக்காவில் டிக்-டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து, சீனாவின் பைட்டான்ஸ் நிறுவனம் வாஷிங்டன் நிறுவனத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

12 views

சீனாவில் பரவும் புருசெல்லோசிஸ் பாக்டீரியா தொற்று - வாழ்நாள் முழுக்க பக்க விளைவுகள்

சீனாவிலிருந்து பரவிய கொரோனா வைரஸ் பிரச்சினையே தீராத நிலையில், அங்கு புதியதாக ஒரு பாக்டீரியா தொற்று ஒன்று பரவ தொடங்கியிருப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

14179 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.