ஆன்லைன் விளையாட்டு இளைஞர்கள், குழந்தைகளை சீரழிக்கிறது - சென்னை உயர் நீதிமன்றம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:30 PM
ஆன்லைன் விளையாட்டுகள் இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக சென்னை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடைவிதிக்க கோரியும், அதன் விளம்பரங்களில் நடிக்கும் கிரிகெட் வீரர் விராட் கோலி, நடிகை தமன்னா ஆகியோரை கைது செய்யக்கோரியும், வழக்கறிஞர் சூரியபிரகாசம் வழக்கு தொடர்ந்திருந்தார். ஆன்லைன் ரம்மியை தடை செய்யக்கோரி வினோத் என்பவரும் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்குகள் நீதிபதிகள் சுந்தரேஷ், ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தது. ஆன்லைன் விளையாட்டுகள், இளைஞர்கள் மட்டுமல்லாமல், குழந்தைகளையும் சீரழிப்பதாக நீதிபதிகள், தெரிவித்தனர். வழக்கில் விராட் கோலி, தமன்னாவை எதிர் மனுதாரர்களாக  இணைக்க மறுப்பு தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை, செப்டம்பர் 29-ம் தேதிக்கு தள்ளிவைத்தது உத்தரவிட்டனர்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.