லடாக்கில் இந்திய ராணுவப் படைகள் குவிப்பு - அதிநவீன போர் விமானங்கள் நிறுத்தம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:25 PM
இந்தியா - சீனா எல்லைப்பிரச்சனை தொடர்பாக ராஜ்நாத் சிங் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளித்த நிலையில், லடாக் பகுதியில் இந்திய ராணுவம் படைகளை குவித்து வருகிறது.
அதிநவீன விமானங்கள் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், லடாக் பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இதனிடையே, தங்களுக்கு தளவாட உள்கட்டமைப்பு புத்திசாலித்தனமாக கட்டமைக்கப்பட்டுள்ளதாக,லடாக் மேஜர் ஜெனரல் அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார். மற்ற யூனிட்டுகளில் உள்ள வீரர்கள் லடாக் யூனிட்டில் தடையின்றி சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். முன்னணி வரிசையில் நிறுத்தப்பட்டுள்ள ஒவ்வொரு வீரருக்கும் அதிநவீன குளிர்கால உடைகள் மற்றும் கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்,அரவிந்த் கபூர் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.