நீட் அச்சத்தில் மாணவன் ஆதித்யா தற்கொலை - விசாரணையை துரிதப்படுத்திய போலீஸ்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 10:16 PM
நீட் அச்சத்தால் தருமபுரி மாணவன் ஆதித்யா தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
விசாரணையில் மாணவன் ஆதித்யா 2018 ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 1200 மதிப்பெண்களுக்கு 595 மதிப்பெண்கள் பெற்றது  தெரிய வந்துள்ளது . 595 மதிப்பெண்ளுக்கு கல்லூரியில் நல்ல குரூப் கிடைக்காது என்பதால் , நீட்தேர்வில் 720  மதிப்பெண்கள் எடுத்தால் மருத்துவ படிப்பில் மகனை சேர்த்து விடலாம் என முடிவெடுத்து கடன்வாங்கி நீட்பயிற்சி வகுப்பில் அவரது தந்தை சேர்த்ததாக கூறப்படுகிறது .. நீட்தேர்வு பயிற்சிவகுப்புகளில் நடத்தும் பாடங்களை முழுமையாக புரிந்துகொள்ள முடியாததால் இரண்டு முறை நீட்தேர்வு எழுதி ஆதித்யா தோல்வியடைந்துள்ளார். மீண்டும் மூன்றாவது முறையாக  நீட்தேர்வு எழுதி , அதில் வெற்றி கிடைக்காவிட்டால் என்ன செய்வது என்ற அச்சத்திலும் பெற்றோர்களின்  எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாமல் போய் விடுமோ என்றும் ஆதித்யா பரிதவித்து வந்த தாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனையடுத்து மாணவன் உயிரிழக்கும் முன் தொலைபேசியில் யாரிடம் பேசினார் என்ற விவரங்களை சேகரித்து விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.