கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் - பேரவையில் மசோதா நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:48 PM
கொரோனா தொற்று நோய் கட்டுப்பாட்டு விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கும் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவரச சட்டத்திற்கு அனுமதி அளித்திருந்த நிலையில்  மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன்படி தனிமைப்படுத்துதலை மீறுபவர்களுக்கு ரூ.500, மாஸ்க் அணியாதவர்களுக்கு ரூ.200, பொது இடங்களில் எச்சில் துப்புவோருக்கு ரூ.500, தனிமனித இடைவெளியை கடைபிடிக்காதவர்களுக்கு ரூ.500, நிலையான வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கப்படும். இதேபோன்று கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் போது எதிர்ப்பு தெரிவித்தால், அது தண்டனைக்கு உரிய குற்றமாக கருதுவதற்கான சட்டத்திருத்தமும்  நிறைவேற்றப்பட்டுள்ளது. தடுப்பவர்களுக்கு அபராதத்துடன், ஓராண்டில் இருந்து மூன்றாண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.