தமிழ் பட இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.சிடம் மோசடி - கடிகாரத்திற்கு பதில் கல்லை கொடுத்து மோசடி
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:36 PM
தமிழ் பட இசையமைப்பாளரான சாம் சி.எஸ். ப்ளிப்கார்ட் நிறுவனத்தில் ஆர்டர் செய்த கடிகாரத்திற்கு பதிலாக பார்சலில் கற்கள் வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தமிழில் வெளியான விக்ரம் வேதா, கைதி, அடங்க மறு உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியவர் சாம் சி.எஸ். இவர் ப்ளிப்கார்ட் இணையதளத்தில் தன் சகோதரருக்கு பரிசளிக்க 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான ஆப்பிள் நிறுவன கடிகாரத்தை ஆர்டர் செய்துள்ளார். அதை கேரளாவில் உள்ள தன் சகோதரருக்கு அனுப்பவே, அந்த பார்சலை பிரித்து பார்த்த போது அதில் கடிகாரத்துக்கு பதிலாக கற்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து தான் ப்ளிப்கார்ட் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இவரின் பதிவை பார்த்த ப்ளிப் கார்ட் நிறுவனம், ஆர்டர் பற்றிய தகவலை கொடுத்தால் உதவுகிறோம் என தெரிவித்துள்ளது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.