கொரோனா காலம் என்பதால் கவனத்துடன் பேரவை நடத்துகிறோம் - துரைமுருகனுக்கு முதலமைச்சர் பதில்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 07:09 PM
சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்க தமிழக அரசு மறந்துவிட்டது ஏன் என ஆதங்கத்தோடு துரைமுருகன் கேள்வி எழுப்பினார்.
சட்டப்பேரவையில் வைக்கப்பட்டுள்ள அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவிக்க தமிழக அரசு மறந்துவிட்டது ஏன் என ஆதங்கத்தோடு துரைமுருகன் கேள்வி எழுப்பினார். பேரவையில் நேரமில்லா நேரத்தில் பேசிய எதிர்கட்சித் துணைத் தலைவர் துரைமுருகன், அண்ணாவின் பெயரில் கட்சி வைத்துள்ள அதிமுக, இன்று இல்லாவிட்டாலும் நாளை அவைக்கு வரும்போது அண்ணா படத்திற்கு மாலை அணிவிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். அதற்கு பதிலளித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அண்ணாவின் படத்திற்கு மாலை போட வேண்டும் என்பது அரசின் எண்ணம் என்றும், தற்போது கொரோனோ காலமாக இருப்பதால், கவனத்துடன் பேரவையை நடத்தி வருவதாகவும், விளக்கமளித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.