மருத்துவ படிப்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு இடஒதுக்கீடு - மசோதா நிறைவேற்றம்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 04:29 PM
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது.
மருத்துவப் படிப்பில் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இந்த மசோதாவை தாக்கல் செய்தார். தமிழக அரசுப் பள்ளிகளில் பயிலக் கூடிய மாணவர்களுக்கு, மருத்துவம், பல் மருத்துவம், இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி ஆகியவற்றில் இளங்கலை படிப்புகளுக்கு முன்னுரிமை அடிப்படையிலான சேர்க்கைக்கான சட்ட முன்வடிவு இந்த மசோதாவில் இடம்பெற்றுள்ளது. இந்த மசோதா ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.