ராஜவாய்க்காலில் தண்ணீர் திறக்கக்கோரி சாலை மறியல்
பதிவு : செப்டம்பர் 15, 2020, 02:33 PM
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே ராஜவாய்க்கால் பாசன நீரை நிறுத்தியதைக் கண்டித்து ஏராளமான விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே ராஜவாய்க்கால் பாசன நீரை நிறுத்தியதைக் கண்டித்து ஏராளமான விவசாயிகள் கறுப்புக் கொடி ஏந்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் இருந்து ராஜவாய்க்காலில் தண்ணீர் பெருக்கெடுத்தது. இதைத் தொடர்ந்து, நெல் சாகுபடி உள்ளிட்ட விவசாய பணிகளில் சேடப்பட்டி, ஆத்தூர், சொக்கலிங்கபுரம், சிந்தையங்கோட்டை உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட கிராம மக்கள் களமிறங்கினர்.  இதனிடையே, ராஜ வாய்க்கால் நீரை நிறுத்தி, குடகனாற்றில் திறந்துள்ளனர். இதனால், அதிர்ச்சியடைந்த ராஜ வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆயிரக்கணக்கானோர், குமுளி சாலையில் கறுப்புக் கொடி ஏந்தி மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக தண்ணீர் திறக்க வலியுறுத்தி போராட்டம் நீடிப்பதால் பரபரப்பு நிலவுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.