1 முதல் 12-ம் வகுப்பு வரை பாடத்திட்டங்கள் குறைக்கும் பணிகள் நிறைவு
பதிவு : செப்டம்பர் 15, 2020, 02:29 PM
தமிழகத்தில் 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டம் குறைக்கும் பணி நிறைவு பெற்றதாக பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
கொரோனா தொற்று பரவல் காரணமாக, தமிழகத்தில் மூடப்பட்ட பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்பதே தெரியாத நிலை இருக்கிறது. அப்படியே திறக்கப்பட்டாலும், முழு பாடத்திட்டங்களை நடத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. இதையடுத்து மாணவர்களை நலனை கருத்தில் கொண்டு 1 முதல் 12ம் வகுப்பு வரை பாடத்திட்டங்களை கணிசமாக குறைக்கும் பணியில் தமிழக அரசின் 16 பேர் கொண்ட சிறப்பு குழு ஈடுபட்டது. தற்போது அந்த பணிகள் நிறைவுபெற்றிருப்பதாக பள்ளிகல்வித்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது. 
பாடத்திட்ட குறைப்பு  பணிகளை மாநில கல்வியியல் ஆராய்சி மற்றும் பயிற்சி நிறுவனம் நிறைவு செய்துள்ளது. பள்ளி திறக்கப்பட்டதும் குறைக்கப்பட்ட பாட பகுதிகளின் அளவு குறித்து அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும் எனவும் கல்வித்துறை தெரிவித்துள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.