பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு - 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:28 PM
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில் நடைபெறும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு 1 மணி நேரம் ஆன்லைனில்  நடைபெறும் என்று, அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதற்காக மாதிரி ஆன்லைன் தேர்வு வரும்19 மற்றும் 21 ஆம் தேதிகளில்  நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 4 வேளைகளில் தேர்வு நடக்க உள்ளது. தேர்வில் 40 கேள்விகள் கேட்கப்படும் என்றும், அதில் 30 கேள்விகளுக்கு மட்டும் மாணவர்கள்  பதிலளித்தால் போதுமானது என்றும் கூறப்பட்டுள்ளது. பாடப்பிரிவுகளில் ஏதேனும் 4 தலைப்புகளை மாணவர்கள் பயின்றால் போதுமானதாம். கேமரா, மைக், லேப்டாப் உள்ளிட்டவற்றை மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆன்லைன் தேர்வின் போது மின்சார பிரச்சனை,சிக்னல் குளறுபடி ஏற்பட்டால் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் தெரிவிக்க வேண்டும்
என்றும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.