காவல் மரணங்களை தடுக்ககோரி மனு தாக்கல் - விசாரணை ஒத்திவைப்பு
பதிவு : செப்டம்பர் 14, 2020, 06:03 PM
காவல் மரணங்கள் , காவல் நிலைய சித்திரவதைகளை தடுக்க உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.
காவல் மரணங்கள் , காவல் நிலைய சித்திரவதைகளை தடுக்க உரிய சட்ட திருத்தங்கள் மேற்கொள்ள கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. பீப்பிள்ஸ் சாரியெட்டர் என்ற அமைப்பு தாக்கல் செய்த மனுவில் , காவல் மரணங்களை தடுக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறைகளில் கொண்டு வரப்பட்ட மாற்றங்கள் பின்பற்றப்படாமல் உள்ளதாக தெரிவித்தனர். உடனடியாக நீதிபதிகள் இந்த மனுவை ஏற்கனவே காவல் மரணங்கள் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனுக்களோடு இணைத்து விசாரிப்பதாக தெரிவித்து , வழக்கை அக்டோபர் 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.