அண்ணா அறிவாலயத்தில் நாளை திமுக மும்பெரும் விழா
பதிவு : செப்டம்பர் 14, 2020, 04:04 PM
ஊரடங்குக் கால விதிமுறைகளுக்கு உட்பட்டு, நாளை திமுக மும்பெரும் விழா,நடைபெறுவதாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஊரடங்குக் கால விதிமுறைகளை மீறிடாமல், பாதுகாப்பும், தனிமனித இடைவெளியோடும், நாளை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முப்பெரும் விழா நடைபெறும் என கூறியுள்ளார். இதில், மாநில நிர்வாகிகள், சென்னையில் உள்ள மாவட்டச் செயலாளர்கள்,எம்எல்ஏக்கள் நேரடியாகப் பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூறியுள்ளார். தொண்டர்களின் குரலை உணர்ந்து, முப்பெரும் விழா நேரலையாக வழங்க உள்ளதாகவும், இதில் ஆளுமைகளுக்கு விருது வழங்க உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பெரியார் விருது, மா.மீனாட்சிசுந்தரத்திற்கும், அண்ணா விருது முனைவர் இராமசாமிக்கும் வழங்க இருப்பதாக கூறியுள்ளார். கலைஞர் விருது முன்னாள் அமைச்சர் எஸ்.என்.எம் உபயதுல்லாவிற்கும், பாவேந்தர் விருது தமிழரசிக்கும்,பேராசிரியர் விருது சுப.இராஜகோபால் அவர்களுக்கு வழங்கப்பட உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.