நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக எல்.ஐ.சி ரூ.33000 கோடிகள் தந்துள்ளது - மத்திய அமைச்சர் பதில்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:20 PM
கடந்த 4 ஆண்டுகளில், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக எல்.ஐ.சி 33 ஆயிரம் கோடி ரூபாய் தந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்துள்ளார்.
கடந்த 4 ஆண்டுகளில், நெடுஞ்சாலைத் திட்டங்களுக்காக எல்.ஐ.சி 33 ஆயிரம் கோடி ரூபாய்   தந்துள்ளதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் அனுராக் தாகூர்  தெரிவித்துள்ளார். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்பி,சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்த அவர், இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள வெங்கடேசன், இந்தியாவின் ஆதாரத் தொழில் வளர்ச்சிக்கு எல்.ஐ.சி அளித்து வரும் அளப்பரிய பங்களிப்பிற்கு இது சாட்சியம் என்று கூறியுள்ளார்.இதனால் எல்.ஐ.சி முழுக்க முழுக்க அரசின் கைகளிலேயே நீடிக்க வேண்டும் என்றும், பங்கு விற்க கூடாது என வலியுறுத்தினார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.