"எல்லோருக்கும் சரி சமமான வாய்ப்பு கிடைக்கும் வரை நீட் தேர்வை மத்திய அரசு ரத்து வேண்டும்" - திமுக எம்.பி. கலாநிதி வீராசாமி வேண்டுகோள்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:12 PM
எல்லோருக்கும் சரிசமமான வாய்ப்பு கிடைக்கும் வரை நீட் தேர்வை ரத்து வேண்டும் என்று நாடாளுமன்ற மக்களவையில் திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மக்களவையில் நடைபெற்ற ஹோமியோபதி மருத்துவ ஆணைய மசோதா தொடர்பான விவாதத்தில் திமுக உறுப்பினர் கலாநிதி வீராசாமி  பங்கேற்று பேசினார். அப்போது அவர் நீட் நுழைவுத்தேர்வில் தேர்ச்சி அடைய முடியவில்லை என்பதற்காக அனிதா உட்பட 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வேதனை தெரிவித்தார் . இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் பல்வேறு விதமான கல்வி முறைகள் இருக்கின்றன என்பதை சுட்டிக் காட்டிய அவர் , எந்த ஒரு மாணவரும் தொழில் நல்முறை  சார்ந்த நுழைவுத் தேர்வில் பங்கேற்க வேண்டும் என்றால் அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் வழங்கப்படவேண்டும் என்று வலியுறுத்தினார்.  பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பல்வேறு விதமான பாடத்திட்டம் முறைகள் இருக்கும் சூழ்நிலையில் நீட் தேர்வை நடத்துவது என்பது அநீதி  என்றும், அவர் குற்றம் சாட்டினார். நீட் தேர்வு, முற்றிலுமாக ஒழிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். அனைத்து பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான பொதுவான கல்வி அமைப்பு கிடைக்கும் வரை அனைவருக்கும் சமமான வாய்ப்புகள் கிடைக்காமல் பொதுத்தேர்வு நடத்துவது என்பது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்களுக்கு செய்யப்படும் பாகுபாடு என்று அவர் குறிப்பிட்டார் .

தொடர்புடைய செய்திகள்

நீதிமன்ற உத்தரவை தாழ்மையுடன் ஏற்கிறேன் - சூர்யா

நீட் தேர்வு விவகாரத்தில் நடிகர் சூர்யா தெரிவித்த கருத்துக்காக அவர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

616 views

பிற செய்திகள்

"அனைத்து ஜனநாயக நெறிமுறைகளும் காற்றில் பறக்க விடப்பட்டது" - தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா

நடப்பு மழைக்கால கூட்டத் தொடரில் ஜனநாயக, நாடாளுமன்ற மரவு மற்றும் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு, தங்களுக்கு வேண்டிய மசோதாக்களை நிறைவேற்றிக் கொண்டார்கள் என, பா.ஜ.க. அரசு மீது தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா குற்றம்சாட்டி உள்ளார்.

22 views

பாஜக தலைவர் முருகன் வீட்டின் முன் பெண் போராட்டம் - பாஜக கொடியை தூக்கிலிட போவதாக கூறி கோஷம்

சென்னையில் பாஜக தலைவர் முருகனின் வீட்டின் முன் பெண் ஒருவர் தனியாளாக நின்று போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.

5 views

குட்கா உரிமை மீறல் நோட்டீஸ் எதிர்ப்பு வழக்கு - நாளை உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு

குட்கா விவகாரத்தில் உரிமை மீறல் குழு மீண்டும் அனுப்பிய நோட்டீசை எதிர்த்து 18 எம்எல்.ஏக்கள் தொடர்ந்த வழக்கில் உயர்நீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு பிறப்பிக்க உள்ளது.

20 views

கந்து வட்டி கேட்டு மிரட்டல் - பிரதமரின் பாராட்டு பெற்ற சலூன் கடை உரிமையாளர் மீது புகார்

மதுரையில் கந்து வட்டி கேட்டு மிரட்டியதாக சலூன் கடை உரிமையாளர் மோகன் என்பவர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.

15 views

கொரோனா: நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை - 30,000 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்க முடிவு

கொரோனா பரவல் நிலையை கண்டறிய, தமிழகம் முழுவதும் நோய் எதிர்ப்புச் சக்தி பரிசோதனை மேற்கொள்ள அரசு முடிவு செய்துள்ளது.

144 views

"கலாச்சார குழுவில் தமிழருக்கு இடம் வேண்டும்" - பிரதமர் மோடிக்கு கடிதம் மூலம் முதலமைச்சர் பழனிசாமி வேண்டுகோள்

இந்திய கலாச்சார ஆய்வு குழுவில், தமிழர்களையும் இடம் பெற செய்ய வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.