பல்கலை. இறுதி ​தேர்வு விவகாரம் : காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து யூஜிசி பரிசீலிக்கும் - மத்திய அமைச்சர்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 03:11 PM
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கல்லூரிகள், இறுதியாண்டிற்கான தேர்வுகளை நடத்த முடியவில்லை என விண்ணப்பித்தால், அதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து, யுஜிசி பரிசீலிக்கும் என, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார்.
செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் கல்லூரிகள், இறுதியாண்டிற்கான தேர்வுகளை நடத்த முடியவில்லை என விண்ணப்பித்தால், அதற்கான காலக்கெடுவை நீட்டிப்பது குறித்து,  யுஜிசி பரிசீலிக்கும் என, மத்திய அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் கூறியுள்ளார். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக இறுதியாண்டு தேர்வு செப்டம்பர் 30 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு திருத்தி அமைக்கப்பட்ட வழிகாட்டு நெறிமுறையில் வெளியிட்டது. இது குறித்து மக்களவையில் எழுத்துப்பூர்வமாக அவர் அளித்துள்ள பதிலில், மாற்றியமைக்கப்பட்ட தேதி மற்றும் அட்டவணை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு விரைவாக தெரிவிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.


ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.