தேசத்துரோக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது - உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:43 PM
டெல்லியில், பேச்சுரிமையும், நீதித்துறையும் என்ற தலைப்பில் காணொளி வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது.
டெல்லியில், பேச்சுரிமையும், நீதித்துறையும் என்ற தலைப்பில் காணொளி வாயிலாக கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர், நிலுவை வழக்குகளும், வெளிப்படையற்ற தன்மையும் நீதித்துறையை பீடித்துள்ள நோய்கள் என கூறியுள்ளார். பேச்சுரிமைக்கு எதிராக இரும்புக்கரம் கொண்டு அரசு எடுத்து வரும் நடவடிக்கையால் தேசத்துரோக வழக்குகள் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக அவர் குறிப்பிட்டார். நடப்பாண்டில் மட்டும் 70-க்கும் மேற்பட்ட தேசத்துரோக வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றங்களில் 3 கோடி வழக்குகள் நிலுவையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அவற்றை முன்னுரிமை அடிப்படையில் விசாரிக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் பி. லோகுர், கூறியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.