இறுதியாண்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் தேர்வு - கல்லூரிகளுக்கு பாரதிதாசன் பல்கலைக்கழகம் உத்தரவு
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:30 PM
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், கொரோனோ ஊரடங்கு காரணமாக ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெறவுள்ளன.
திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில், கொரோனோ ஊரடங்கு காரணமாக  ஏப்ரல் மாதம் நடைபெற வேண்டிய இளநிலை மற்றும் முதுநிலை பட்ட இறுதியாண்டு மாணவர்களுக்கான தேர்வுகள் தற்போது நடைபெறவுள்ளன. இதன்படி, பாரதிதாசன் பல்கலைக்கழக இணைவு பெற்ற, 140க்கும் மேற்பட்ட கல்லூரிகளில், 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆன்லைன் மூலம் இந்த தேர்வை எழுதவுள்ளனர். அரசு வழிகாட்டுதல்படி, வரும் 21 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதிக்குள் தேர்வுகளை நடத்த கல்லூரிகளுக்கு பல்கலைக்கழக நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.இதற்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் செய்யப்பட்டு வருகின்றன.இது குறித்து கல்லூரி முதல்வர்களுடனான ஆலோசனைக் கூட்டம் நாளை நடைபெறுகிறது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.