45 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு - மத்திய சுகாதாரத்துறை அமைச்சர்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:20 PM
நாட்டில் இன்று வரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 76 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மக்களவையில் பேசிய அவர், மகாராஷ்டிரா, டெல்லி, ஆந்திரா, தமிழ்நாடு, தெலங்கானா மற்றும் குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து மட்டும் அதிகப்படியான பாதிப்பு மற்றும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறினார்.
உலகிலேயே மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவாக உள்ளதாகவும்,

ஒருமுறை ஒருவருக்கு தொற்று ஏற்பட்டு விட்டால் ஒரு நாளில் இருந்து 14 நாள் வரை எப்போது வேண்டுமானாலும் அவருக்கு அந்த நோய் அறிகுறி ஏற்படலாம் என தெரிவித்தார்.

92 சதவீத கொரோனா பாதிப்புகள் மிதமான அறிகுறி கொண்ட பாதிப்புகள் மட்டுமே என்றும், 5 சதவீத பாதிப்புகள் மட்டுமே தீவிரமான பாதிப்புகள் கொண்டவை என கூறினார்.

பொது முடக்க காலகட்டத்தில் நான்கு மாதங்களில் கூடுதலான மருத்துவ கட்டமைப்புகள் பயன்படுத்திக் கொள்ளப்பட்டதாகவும்,

இன்று வரை 45 லட்சத்திற்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், 76 ஆயிரம் பேர் உயிரிழந்ததாகவும் ஹர்ஷ் வர்தன் தெரிவித்தார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.