கொரோனா வைரஸ் உகான் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டுள்ளது - ஹாங்காங் ஆராய்ச்சியாளர்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:15 PM
சீன ஆய்வு மையத்தில்தான் கொரோனா வைரஸ் உருவாக்கப்பட்டது என ஹாங்காங் நுண்ணுயிரிகள் ஆராய்ச்சியாளர் டாக்டர் லி-மெங் யான் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.
உலகம் முழுவதையும் இன்று ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ் உகானில் இருக்கும் சீன அரசின் நுண்ணுயிரிகள் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டது என்ற பரவலான குற்றச்சாட்டு நிலவுகிறது. இந்நிலையில் ஹாங்காங்கை சேர்ந்த நுண்ணுயிரிகள் ஆய்வாளர் டாக்டர் லி-மெங் யான், கொரோனா வைரஸ் உகான் ஆய்வு மையத்தில்தான் உருவாக்கப்பட்டு இருக்கிறது என்ற பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரிட்டன் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்து பேசிய லி-மெங் யான், தொற்று பரவல் தொடர்பாக வெளிப்படையாக அறிவிக்கும் முன்னரே சீனாவிற்கு முழு தகவலும் தெரியும், வைரஸ் இயற்கையாக உருவானது கிடையாது எனக் கூறியிருக்கிறார். 

வைரஸ் பரவல் தொடர்பாக டிசம்பர், ஜனவரியில் மேற்கொள்ளப்பட்ட ரகசிய ஆய்வில், கிடைத்த தகவலை விரைவில் பிற ஆராய்ச்சியாளர்களுடன் வெளியிடுவேன் எனக் குறிப்பிட்டு இருக்கிறார்.

தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக தெரிவித்துள்ள லி-மெங், அமெரிக்காவிற்கு தப்பி சென்றுள்ளார். உலக சுகாதார அமைப்பின் ஆலோசகர் ஒருவரிடம்  விவகாரத்தை எடுத்துச் சென்றபோது என்னை அமைதியாக்க முயற்சி செய்யப்பட்டது எனக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.