"நாடாளுமன்ற எம்.பி.க்கள் தங்களை காத்து கொள்ள வேண்டும்" - பிரதமர் நரேந்திர மோடி எம்.பி.க்களுக்கு வேண்டுகோள்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 02:04 PM
கொரோனா கால கட்டத்தில், நாடாளுமன்றம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தங்களை தாங்களே காத்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா கால கட்டத்தில், நாடாளுமன்றம் கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, தங்களை தாங்களே காத்து கொள்ள வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார். டெல்லியில், நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா பரவி வரும் நிலையில் இரு அவைகளும் கூட உறுப்பினர்கள் ஒப்புக்கொண்டுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாக கூறியுள்ளார். கொரோனாவிற்கு எதிரான தடுப்பூசி கண்டுபிடிப்பதில், நிச்சயம் நாம் வெற்றி பெறுவோம் என்றும் பிரதமர் மோடி குறிப்பிட்டார். இரவு பகல் பாராமல் பனியிலும் மழையிலும், இந்திய எல்லைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் வீரர்களின் பணி அளப்பரியது என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்திய வீரர்களுக்கு ஆதரவாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாக, ஒன்றுபட்டு ஒரு முக சிந்தனையுடன் ஆதரவு அளிக்க வேண்டும் என்றும் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார். இரு அவைகளையும் சுமுகமாக நடத்திட வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"அதிக அளவில் மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும்" - பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

முன்னுரிமை அளிக்கப்படும் துறைகளில் மாவட்ட வாரியாக கடன்கள் வழங்குவது குறித்து ரிசர்வ் வங்கி செப்டம்பர் 4ஆம் தேதி பிறப்பித்துள்ள ஆணையைப் பற்றி பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

118 views

"ஐ.நா. பொது சபைக் கூட்டம் திங்களன்று தொடங்குகிறது" - பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் பங்கேற்பு

வரும் திங்கள்கிழமை தொடங்க உள்ள ஐ.நா. பொது சபையின் கூட்டத்தின் இரு அமர்வுகளில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்க உள்ளதாக ஐ.நா.வுக்கான இந்திய நிரந்தர பிரதிநிதி டி.எஸ். திருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

29 views

பிற செய்திகள்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் - லவ் ஜிகாத்திற்கு எதிராக அவசரச் சட்டம்

காதல் என்ற பெயரில் மதமாற்றம் செய்வதை தடுக்க, தேவைப்பட்டால் அவசரச்சட்டம் கொண்டு வருவதற்கான வழிமுறைகளை ஆராயுமாறு அதிகாரிகளுக்கு உத்தரபிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.

6 views

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா - மாநிலங்களவையில் நிறைவேற்றம்

நொடிப்பு மற்றும் திவால் சட்டத் திருத்த மசோதா, குரல் வாக்கெடுப்பு மூலம் மாநிலங்களவையில் நிறைவேறியது.

138 views

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

36 views

"புதிய கல்வி கொள்கை அமலால் இந்தியாவின் பழம்பெருமை திரும்பும்" - குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் நம்பிக்கை

நவீன கல்வி முறையில் இந்தியாவின் உயர் கல்வி நிலையங்களால் உயர்ந்த நிலையை எட்ட முடியவில்லை என்று குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ளார்.

40 views

இந்திய சினிமா துறையில் சீர்திருத்தம் - பிரதமர் மோடிக்கு, நடிகை கங்கனா கோரிக்கை

இந்தியாவில் பல்வேறு காரணிகளால் பிரிந்திருக்கும் சினிமா துறையை ஒன்றிணைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு நடிகை கங்கனா ரனாவத் கோரிக்கை விடுத்துள்ளார்.

72 views

கொரோனா மீட்பு எண்ணிக்கை- அமெரிக்காவை முந்தியது இந்தியா

இந்தியாவில் குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 42 லட்சத்தை கடந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

475 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.