"ஒட்டு மொத்த அவை ஒருமித்த கருத்தோடு உள்ளது" - மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உரை
பதிவு : செப்டம்பர் 14, 2020, 01:51 PM
நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக ஒட்டு மொத்த அவையும், ஒருமித்த கருத்தோடு உள்ளது என்ற செய்தியை, நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நாட்டின் வளர்ச்சி, பாதுகாப்பு, முன்னேற்றம் ஆகியவற்றுக்காக ஒட்டு மொத்த அவையும், ஒருமித்த கருத்தோடு உள்ளது என்ற செய்தியை, நாட்டு மக்களுக்கு வழங்க வேண்டும் என மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.  கூட்டத்தொடரை துவக்கி வைத்து பேசிய அவர், உறுப்பினர்களின் வசதிக்காக டிஜிட்டல் மயம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் சபாநாயகர் ஓம் பிர்லா கூறியுள்ளார். 

கேள்வி நேரம், தனி நபர் மசோதா தற்காலிக ரத்து செய்யும் தீர்மானம்

கொரோனா பரவலை முன்னிட்டு, இந்த கூட்டத் தொடரில் வாய் மொழியாக பதிலளிக்கும் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதா போன்றவற்றை தற்காலிகமாக ரத்து செய்யும் தீர்மானத்தை மக்களவையில்  பாராளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி முன்மொழிந்தார். அப்போது கேள்வி நேரத்தை ரத்து செய்ய கூடாது என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் கோரிக்கை விடுத்தனர். பின்னர் கேள்வி நேரம் மற்றும் தனிநபர் மசோதாவை தற்காலிகமாக ரத்து செய்யும் தீர்மானம் மக்களவையில் நிறைவேறியது.

கொரோனா காலம் - மாநில அரசுக்கு நிதி ஒதுக்கீடு - மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில் தகவல்

கொரோனா காலத்தில், மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு சார்பில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் 11 ஆயிரத்து 566 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, மத்திய இணையமைச்சர் அனுராக் தாக்கூர் மக்களவையில், தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

"புலம்பெயர் தொழிலாளர்கள் பொருட்கள் அல்ல" - மாநிலங்களவையில் திமுக எம்.பி. சண்முகம் பேச்சு

புலம்பெயர் தொழிலாளர்களை பொருட்களைப்போல் எண்ணக்கூடாது என்று தொற்றுநோய் தடுப்பு சட்டத்தின் மீதான விவாதத்தில் திமுக மாநிலங்களவை எம்.பி. சண்முகம் பேசினார்.

61 views

ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி - முன்னணி வீரர் மெத்வதேவ் அதிர்ச்சி தோல்வி

ஜெர்மனியில் ஹாம்பர்க் ஓபன் டென்னிஸ் போட்டி நடைபெற்று வருகிறது.

12 views

பிற செய்திகள்

நாடு முழுவதும் உள்ள ஐஐடி-களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரிய மனு தள்ளுபடி

நாடு முழுவதும் உள்ள IIT களில் நடைபெறும் தற்கொலைகளை தடுக்கக்கோரியும், மாணவர்கள் மீது அக்கறை செலுத்தக்கோரியும் கவுரவ் குமார் என்பவர் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது,.

3 views

"ஊடகத்துறையை வீட்டளவு எடுத்து சென்று நாட்டளவில் உயர்த்தியவர் சிவந்தி ஆதித்தனார்" - தெலங்கானா ஆளுநர் தமிழிசை புகழாரம்

ஏட்டளவில் இருந்த ஊடகத்துறையை வீட்டளவிற்கு எடுத்துச் சென்று நாட்டளவில் உயர்த்திய பத்மஸ்ரீ டாக்டர் சிவந்தி ஆதித்தனாரின் 85வது பிறந்த நாளில் அவரது நினைவை போற்றி வணங்குவதாக தெலுங்கானா ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்

21 views

ஜிப்மரில் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவு வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது

புதுச்சேரி ஜிப்மரில் மருத்துவம் சார்ந்த படிப்புகளுக்கான நுழைவுத்தேர்வு முடிவுகள் வரும் 29ம் தேதிக்குள் வெளியாகிறது.

3 views

கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் மத்திய ரயில்வே இணை அமைச்சர் சுரேஷ் அங்காடி மரணம்

மத்திய ரயில்வே இணையமைச்சர் சுரேஷ் அங்காடி, கொரோனாவுக்கு சிகிச்சைபெற்று வந்த நிலையில் திடீரென்று உயிரிழந்தார்.

26 views

"மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுகிறது" - மாவட்ட ஆட்சியர் அருண் தகவல்

புதுச்சேரியில் கொரோனா தொற்று அறிகுறிகள் இருந்தாலும், மருத்துவமனைக்கு வர முன்வராத காரணத்தால் உயிரிழப்புகள் ஏற்படுவதாக, மாவட்ட ஆட்சியர் அருண் தெரிவித்துள்ளார்.

9 views

உளுந்தூர்பேட்டையில் அமையும் வெங்கடாசலபதி கோவில் - ஆந்திர முதலமைச்சருக்கு தமிழக முதலமைச்சர் கடிதம்

உளுந்தூர் பேட்டையில் அமைய இருக்கும் திருப்பதி வெங்கடாசலபதி கோவிலுக்கு நிர்வாக ஒப்புதல் தருமாறு ஆந்திர முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டிக்கு தமிழக முதலமைச்சர் பழனிசாமி கடிதம் எழுதியுள்ளார்.

2421 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.