காஷ்மீர், லடாக் செல்லும் தமிழக காவலர்கள் - ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத் திட்டத்தில் அனுப்ப திட்டம்
பதிவு : செப்டம்பர் 14, 2020, 12:17 PM
தமிழகத்தில் இருந்து 7 காவலர்களை ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில் பணிபுரிவதற்காக தமிழக காவல்துறை அனுப்ப உள்ளது.
கடந்த 2015ஆம் ஆண்டு ஏக் பாரத் ஸ்ரேஷ்ட பாரத் என்ற திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் இடையே கலாச்சாரம், மொழி, உணவு பழக்கவழக்கங்கள் குறித்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு மாநிலமும் மற்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உடன் ஒரு வருடம் இணைந்து பணியாற்ற வேண்டும். அதன்படி, தமிழகத்தில்  இருந்து காவல் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் உட்பட 7 காவலர்கள் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் அனுப்பப்படுகின்றனர். இதற்கான பட்டியல் தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

பிற செய்திகள்

"50% மத்திய அரசு வழங்க வேண்டும்" - மக்களவையில் ரவீந்திரநாத் எம்.பி. வலியுறுத்தல்

தமிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக ஆகும் செலவில் 50 சதவீதத்தை மத்திய அரசு தரவேண்டும் என்று மக்களவையில் ஓ.பி. ரவீந்திர நாத் எம்பி வலியுறுத்தினார்.

17 views

"கை தட்டுவதாலும், விளக்கு ஏற்றுவதாலும் கொரோனா ஒழிந்து விடுமா?" - திமுக எம்.பி. தயாநிதி மாறன்

மக்களவையில் கொரோனா சூழல் குறித்த விவாதத்தில் திமுக எம்பி தயாநிதி மாறன் பேசியபோது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு தோல்வியுற்றதாக குற்றம்சாட்டினார்.

9 views

மாநிலங்களவை துணைத்தலைவர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் - மத்திய அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர் சந்திப்பு

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் செயல்பாடு வெட்கக்கேடானது என்று மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங் கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார்.

10 views

கொரோனா தொற்று தடுப்பு நிலவரம் - வருகிற 23ஆம் தேதி காணொலி கூட்டம் என தகவல்

கொரோனா தடுப்பு பணி நிலவரம் குறித்து வருகிற 23ஆம் தேதி ஏழு மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

8 views

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு - நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம்

வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள காந்தி சிலை முன்பு எதிர்க்கட்சி எம்பிக்கள் போராட்டம் நடத்தினர்.

12 views

"வேளாண் மசோதாக்களை தேர்வுக்குழுவுக்கு அனுப்ப வலியுறுத்தினேன்" - திருச்சி சிவா

மாநிலங்களவையில் வேளாண் மசோதாக்கள் மீதான ஓட்டெடுப்பு முறையாக நடக்கவில்லை என்று திமுக எம்பி திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

58 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.