காவல் உயர் அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் பக்கம் - மோசடி கும்பலை பிடிக்க போலீசார் தீவிரம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 07:03 PM
காவல்துறை அதிகாரிகள் பெயரில் பேஸ்புக்கில் மோசடி செய்ய முயன்ற கும்பல், இப்போது சென்னை காவல் ஆணையரின் பெயரிலும் போலி கணக்கை துவக்கி கைவரிசை காட்ட முயன்றது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஊரடங்கு காலத்தில் சைபர் க்ரைம் குற்றங்களுக்கு பஞ்சமே இல்லை என சொல்லும் அளவுக்கு அடுத்தடுத்த சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கிறது. அப்படியான குற்றங்களில் இப்போது காவல்துறை அதிகாரிகளையே பதம் பார்த்திருக்கிறது பலே மோசடி கும்பல்... 

கடந்த சில நாட்களாக காவல் துணை ஆணையர்களின் பெயரில் போலியான பேஸ்புக் கணக்குகள் துவங்கப்பட்ட செய்திகள் வெளியாகின. 

சென்னை மாநகர கூடுதல் ஆணையர் தினகரன், மாதவரம் உதவி ஆணையர் அருள் சந்தோசம், வண்ணாரப்பேட்டை சரக உதவி ஆணையர் ஜூலியஸ் சீசர் உள்ளிட்டோரின் பெயர்களில் அடுத்தடுத்து போலியான பேஸ்புக் பக்கங்கள் துவங்கப்பட்டன. காவல் உடையில் உள்ள அவர்களின் புகைப்படங்களை பார்த்த பலரும் அவர்களின் பக்கத்தை பாலோ செய்ய துவங்கினர். 

அந்த கணக்கில் எப்போதும் ஆக்டிவ்வாக இருக்கும் கும்பல், அவசர தேவை என கூறி பணம் கேட்டுள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த சிலர் சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டபோது தான் அது மோசடி கும்பல் என தெரியவந்தது. 

அடுத்தடுத்து காவல் உதவி ஆணையர்கள் மற்றும் முன்னாள் காவல்துறை அதிகாரிகளின் பெயரில் போலி கணக்குகள் துவங்கப்பட்டு வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி வந்தது. 

ஏடிஜிபி அந்தஸ்தில் இருக்கக் கூடிய டேவிட்சன் ஆசீர்வாதம், ஏடிஜிபி ரவி ஐஜி சுனில் குமார் உள்ளிட்டோரின் பெயர்களிலும் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கப்பட்டதால் பரபரப்பும் அதிகமானது.... 

இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் வடமாநிலத்தை சேர்ந்த ஒரு கும்பல் இதில் ஈடுபட்டதும் உறுதியானது. செல்போனை கொண்டு போலியான பேஸ்புக் கணக்கை உருவாக்கியதும் தெரியவந்த நிலையில் போலி கணக்குகள் முடக்கப்பட்டன. 

இந்த சூழலில் தான் சென்னை காவல்துறை ஆணையரான மகேஷ்குமார் அகர்வாலிடமே தன் வேலையை காட்டியிருக்கிறது அந்த மோசடி கும்பல். தமிழகம் முழுவதும் மக்களுக்கு பரீட்சயமான அவரின் புகைப்படங்களை பயன்படுத்தி, போலி பேஸ்புக் கணக்கை உருவாக்கியது அந்த கும்பல். 

அச்சு அசலாக அவரின் பேஸ்புக் பக்கம் போலவே, துல்லியமான தகவல்களையும், போட்டோக்களையும் பதிவேற்றி இருக்கிறது அந்த கும்பல். இது உண்மையான பேஸ்புக் அக்கவுண்ட் தான் என நம்பிய பலரும் நட்பு விண்ணப்பம் கொடுத்துள்ளனர். 

ஒரு கட்டத்தில் அவசர தேவை என கூறி 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை பணம் கேட்டு ஒரு போஸ்ட் பதிவேற்றப்பட்டது. இதைப் பார்த்து சந்தேகம் அடைந்த சிலர் இதனை காவல் ஆணையரின் கவனத்திற்கு கொண்டு செல்லவே, நிலைமை விபரீதம் ஆவதை உணர்ந்தனர் போலீசார்... 

இதனால் அதிர்ச்சியடைந்த மகேஷ்குமார் அகர்வால், அந்த போலி பக்கத்தை முடக்குமாறு சைபர் க்ரைம் போலீசாருக்கு உத்தரவிட்டார். அந்த கணக்கு முடக்கப்பட்டு விசாரணையும் நடைபெற்று வருகிறது. 

இந்த சம்பவத்தில் வடமாநில கும்பல் ஒன்று இயங்கி வருவதாக உறுதியான நிலையில் சைபர் க்ரைம் போலீசார் அவர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். 

பிற செய்திகள்

6 பல்கலைக் கழக கல்லூரிகளின் இறுதியாண்டு பருவத் தேர்வு

தமிழகத்தில் உள்ள 6 பல்கலைக் கழகங்களில் இறுதியாண்டு பருவத் தேர்வுகள் இன்று தொடங்குகின்றன.

3 views

200க்கும் அதிகமான மையங்களில் - 10,12 ஆம் வகுப்பு தனித்தேர்வுகள்

பொதுத்தேர்வில் தோல்வியடைந்த பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான தனித் தேர்வுகள் மற்றும் 10 ம் வகுப்பு மாணவர்களுக்கான தனித்தேர்வுகள் இன்று முதல் நடைபெற உள்ளன.

24 views

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் - ஆலோசனையில் முடிவு

குலசை தசரா விழா சிறப்பாக நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

31 views

108 ஆம்புலன்ஸ் எத்தனை நிமிடத்தில் வருகிறது:புதிய மென்பொருள் விரைவில் அறிமுகம் - அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

108 ஆம்புலன்ஸ் சம்பவ இடத்திற்கு எத்தனை நிமிடத்தில் வருகிறது என்பதை கண்டறிவதற்கான செயலி தமிழகத்தில் உருவாக்கப்பட்டு வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

13 views

15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை - திருமணம் செய்வதாக அழைத்த சென்ற நபர் போக்சோவில் அடைப்பு

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே 15 வயது பள்ளி மாணவி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

115 views

"நான் உயிருடன் இருக்கும் வரை காந்தி மார்க்கெட் இடமாற்றம் செய்யப்படாது" - அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் ஆவேசம்

மார்ச் மாதம் ஊரடங்கு தொடங்கியது முதல் திருச்சி காந்தி மார்கெட் மூடப்பட்டு பொன்மலை ஜி கார்னர் மைதானத்தில் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.

3 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.