நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் - பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சி
பதிவு : செப்டம்பர் 13, 2020, 03:47 PM
ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர்.
ராமேஸ்வரம் கோயிலில் கடந்த 12 நாட்களாக சுமார் 2 ஆயிரம் முதல் இரண்டாயிரத்து 500 பேர் வரை சாமி தரிசனம் செய்து சென்ற நிலையில், இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறையை முன்னிட்டு, அதிகாலை முதலே  பக்தர்கள் அக்னி தீர்த்தக் கடலில் நீராடிவிட்டு, கோயில் ரதவீதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். முன்னதாக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கப்பட்டனர். பக்தர்களின் வருகையால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நாகராஜா கோயிலில் குவிந்த பக்தர்கள் - ஆவணி கடைசி ஞாயிற்றுக்கிழமை - பக்தர்கள் வழிபாடு

ஆவணி மாதம் கடைசி ஞாயிற்றுக்கிழமையான இன்று, கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள நாகராஜா கோயிலில்  ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். இவர்கள் அனைவரும் கொரோனா ஊரடங்கு வழிகாட்டி நெறிமுறைகளின்படி, சமூக இடைவெளி கடைப்பிடித்தும், முகக் கவசம்  அணிந்தும் நீண்ட வரிசையில் நின்று வழிபாடு நடத்தினர். ஆண்டுதோறும் ஆவணி ஞாயிற்றுக் கிழமை அன்று, நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் கேரள மாநிலத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து நாகர் சிற்பங்களுக்கு உப்பு, மூட்டை, மஞ்சள் தூள், பால்  உள்ளிட்ட பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்து வழிபடுவது வழக்கம்.

வேளாங்கண்ணி பேராலயத்தில் குவிந்த பக்தர்கள்- இடைவெளியை மறந்து கடற்கரையில் கூடிய மக்கள்

நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில், பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமையான இன்று, ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். 
வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து பக்தர்கல் கார் மற்றும் பேருந்துகள் மூலம் வேளாங்கண்ணி வந்துள்ளனர். அதோடு, வேளாங்கண்ணி கடற்கரையில் சுற்றுலா பயணிகள் சமூக இடைவெளி இன்றியும், முக கவசம் இல்லாமலும் குவிந்து வருகின்றனர். காவல்துறையினர் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்து வரும் நிலையில், தொற்று மேலும் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் புரட்டாசி திருவிழா துவக்கம் - அரசின் வழிகாட்டுதலின் படி பக்தர்கள் சுவாமி தரிசனம்

மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி ஆலயத்தில் வேத மந்திரங்கள் மங்கள வாத்தியங்கள் முழங்க புரட்டாசி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் சிறப்பாக துவங்கியது.

12 views

பிற செய்திகள்

தனி விமானத்தில் திடீரென டெல்லி சென்ற டிடிவி தினகரன் - சசிகலா விடுதலை தொடர்பாக டெல்லி பயணமா?

திடீரென டெல்லி சென்ற அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தாம் தனிப்பட்ட பயணமாக சென்றேன் என கூறியுள்ளார்.

252 views

"தமிழகத்திற்கு நீட் தேவை இல்லை" - அமைச்சர் ஜெயக்குமார் பரபரப்பு பேச்சு

தமிழகத்தில் நீட் தேர்வை நடத்த வேண்டும் என்று ஆதிமுக அரசு ஒருபோதும் விரும்பியது கிடையாது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

26 views

தமிழகத்தில் மேலும் 5,516 பேருக்கு கொரோனா - ஒரே நாளில் 60 பேர் உயிரிழப்பு

தமிழகத்தில் மேலும் 5 ஆயிரத்து 516 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

117 views

"சம்பிரதாயத்துக்காக சட்டமன்றம் கூட்டப்பட்டது" - தமிழக அரசு மீது திமுக எம்.எல்.ஏ.குற்றச்சாட்டு

புதுக்கோட்டையில் நடந்த திமுகவின் எல்லோரும் நம்முடன் நிகழ்ச்சியில் பலர் தங்களை கட்சியின் உறுப்பினர்களாக சேர்த்துக் கொண்டனர்.

11 views

கொள்ளிடம் புதிய கதவணை கட்டுமான பணிகள் 55% நிறைவு - பொதுப்பணித்துறை தகவல்

கொள்ளிடம் ஆற்றில் 430 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

237 views

நீட் எதிர்ப்பு... 7-வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேர் கைது

நீட் தேர்வை எதிர்த்து சென்னையில் 7வது நாளாக காலவரையற்ற உண்ணா விரதப் போராட்டத்தில் ஈடுப்பட்ட 47 பேரை போலீசார் கைது செய்தனர்.

173 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.