நாமக்கல்லில் ரூ.71 லட்சம் கிசான் திட்ட முறைகேடு- மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:29 AM
நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 71 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
நாமக்கல் மாவட்டத்தில் கிசான் திட்டத்தில் 71 லட்சம் ரூபாய் முறைகேடு நடந்திருப்பதாக மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல்லில் கொரோனா தொற்றுக்கு பலியான அரசு ஊழியர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் பங்கேற்ற பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, நாமக்கல்லில் கிசான் திட்டத்தில் 1939 நபர்கள், 71 லட்சம் ரூபாய்க்கு முறைகேட்டில் ஈடுபட்டிருப்பதாகவும், அவர்களிடம் இருந்து முதற்கட்டமாக 37 லட்சம் ரூபாய் திரும்பப் பெறப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். 

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.