கிஷான் திட்டம் மூலம் விவசாயிகள் அல்லாத 52000 பேர் - 4 கோடியை மீட்க நடவடிக்கை தீவிரம்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:16 AM
பிரதமரின் கிஸான் திட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் விவசாயிகளே அல்லாத 52 ஆயிரம் பே​ர் பதிவு செய்து மோசடி செய்தது அம்பலமாகியுள்ளது.
பிரதமரின் கிஸான் சம்மான் என்ற விவசாயிகளுக்கு நேரடியாக உதவும் திட்டத்தில், தமிழகத்தின் 13 மாவட்டங்களில் முறைகேடாக பதிவு செய்து மோசடி செய்து வருவது அம்பலமானது. இதன் ஒருபகுதியாக விழுப்புரத்தில் நடைபெற்ற பதிவுகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். கடந்த ஏப்ரல் மாதத்தில் தொடங்கி புதிதாக சேர்க்கப்பட்ட 70 ஆயிரம் பேரில் விவசாயிகளே அல்லாத 42 ஆயிரம் பேரும், வெளி மாவட்டங்களை சேர்ந்த 10 ஆயிரம் பேரும் என 52 ஆயிரம் பேர் போலியாக பயனாளியாக பணம்பெற்றது தெரியவந்தது. அவர்கள், தலா 4 ஆயிரம் பெற்றுள்ள நிலையில்,19 ஆயிரம் பேரின் கணக்கில் இருந்து 7 கோடி ரூபாய் திரும்ப பெறப்பட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில், கடலூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் அல்லாத 10 ஆயிரம் பேருக்கு விழுப்புரம் மாவட்ட வங்கிகளில் உதவித் தொகை வரவு வைக்கப்பட்டு உள்ளதும், அவர்களிடம் இருந்து 4 கோடி ரூபாயை மீட்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.  

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.