உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டாம் மாணவச்செல்வங்களே - மு.க.ஸ்டாலின்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:13 AM
மாணவச் செல்வங்களே.. எட்டு மாதங்கள் கலங்காது பொறுத்திடுங்கள், விடியல் பிறக்கும் என, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நீட் எனும் கொடுவாளின் கொடூரத்தன்மையால், மாணவர்கள் தற்கொலை செய்துக்கொள்வது வேதனை தருவதாக அறிக்கையில் கூறியுள்ளார். உயிரை மாய்த்துக் கொள்வது, எதற்கும் தீர்வாகாது என்றும், உங்களை நம்பி பெற்றோரும், இந்த மண்ணும், நாடும் இருப்பதாக ஸ்டாலின் கூறியுள்ளார். 
மருத்துவக் கனவுகளைத் துளிர்க்கச் செய்திட எந்தவிதமான சட்டப்போராட்டத்தையும், ஆட்சிப் போராட்டத்தையும் திமுக  மேற்கொள்ளுவது உறுதி என்று கூறியுள்ள அவர், மாணவச்செல்வங்கள் இன்னும் 8 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.இன்னொரு அனிதாவோ, மற்றொரு ஜோதிஸ்ரீ துர்காவோ இந்தக் கொடூர முடிவுக்கு ஆட்படக்கூடாது என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.