திருமணமான 2 மாதத்தில் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்த கணவர்
பதிவு : செப்டம்பர் 13, 2020, 09:02 AM
திருமணமான புதுமணப்பெண் இரண்டே மாதத்தில் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஜெயங்கொண்டம் அருகே நடந்துள்ளது.
திருமணமான புதுமணப்பெண் இரண்டே மாதத்தில் கணவனால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம், ஜெயங்கொண்டம் அருகே நடந்துள்ளது. புதுமணத்தம்பதிக்குள் நடந்தது என்ன என்பது குறித்து விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு...

அரியலூர் மாவட்டம் வடுகர்பாளையம் வடக்கு தெருவை சேர்ந்த 23 வயதான தமிழரசன் பால் வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கும் மங்களம் கிராமத்தை சேர்ந்த பராசக்தி என்ற பிரியதர்ஷினிக்கும் கடந்த இரண்டு மாதத்திற்கு முன் திருமணம் நடைபெற்றது. இருவரும் தனியாக வசித்து வந்தனர். இந்த நிலையில் பிரியதர்ஷினி வீட்டில் சடலமாக கிடந்துள்ளார்.

இதனை பார்த்த அருகிலிருந்தவர்கள் இதுகுறித்து ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், பிரியதர்ஷினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கணவர் பிரியதர்ஷிணியின் கணவர் தமிழரசனை பிடித்து 
போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, 

மதுப்பழக்கத்திற்கு அடிமையான தமிழரசன் தினமும் குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். 

இதனால் வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டு மனைவியை கடுமையாகவும் தாக்கியுள்ளார். 

இந்நிலையில் சனிக்கிழமையன்று மதியம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த தமிழரசன், வழக்கம்போல தனது மனைவியுடன் தகராறு செய்துள்ளார். 

இதில் இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டபோது,கழுத்தை நெரித்து பிரியதர்ஷினியை, தமிழரசனின் கொலை செய்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதையடுத்து தமிழரசனை போலீசார் கைது செய்தனர். திருமணமான 2 மாதத்தில் புதுமணப்பெண்  கொலை செய்யப்பட்ட சம்பவம்  அப்பகுதி முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.